Monday, 8 November, 2010

Microsoft Word 2007 : அவசியம் அறிந்துகொள்ளவேண்டியது.

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில், Default ஆக Calibri என்ற எழுத்துருவும், எழுத்துருவின் அளவு 11 புள்ளிகளாகவும், மற்றும் Default paragraph spacing 10 புள்ளிகளாகவும் இருக்கும். 

இதனால் அவரசமாக ஒரு கடிதம் உருவாக்கவோ, அல்லது ஏதேனும் ஆவணங்களை உருவாக்கும் பொழுதும், இதனை நமது தேவைக்கு மாற்றியமைக்க வேண்டிய நிலை உள்ளது. 2003 பதிப்பை பயன்படுத்தி வந்தவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் இதனை மாற்றியமைப்பது ஒரு வித எரிச்சலூட்டும் வேலையாகும். (கீழே உள்ள படத்தில் default paragraph spacing பிரச்சனையினால் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள இடைவெளியை கவனியுங்கள்.)


வழக்கமாக இந்த பிரச்சனைக்கு, ஒவ்வொருமுறையும், அனைத்தையும் தேர்வு செய்து வலது க்ளிக் செய்து Paragraph பகுதிக்கு சென்று,

Don't add space between paragraphs of the same style எனும் Check box ஐ க்ளிக் செய்து சரி செய்ய வேண்டியிருக்கும். இதே போலத்தான் எழுத்துரு மற்றும் அளவு. இது ஒவ்வொரு முறையும் புதிய டாக்குமெண்டை உருவாக்கும் பொழுதும் நாம் சந்திக்கிற பிரச்சனை. இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். 

மைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு, Home Ribbon டேபில், Change Styles என்ற பொத்தானுக்கு கீழே உள்ள வலப்புறம் நோக்கிய சிறிய அம்புக்குறியை க்ளிக் செய்யுங்கள்.இப்பொழுது திறக்கும் styles வசனப் பெட்டியில், கீழே உள்ள Manage Styles என்ற பொத்தானை க்ளிக் செய்திடுங்கள்.

அடுத்து திறக்கும் Manage Styles திரையில், Set Defaults டேபை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுதுள்ள திரையில் தேவையான Font மற்றும் Font size ஐ மாற்றிக்கொள்வதுடன், Paragraph Spacing பகுதியில் After என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Auto என்பதை தேர்வு செய்து பின்னர், கீழே உள்ள New Documents based on this template என்பதை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்குங்கள்.

அவ்வளவுதான். இதற்கு மேலாக நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்ட்களில் இந்த பிரச்சனை வராது. .

17 comments:

nis said...

அவசியமான தகவல்

thiruthiru said...

மிக மிக நன்றி திரு சூர்யா! பல நேர்ரங்களில் ஏன்தான் 2003லிருந்து 2007க்கு மாறினோமோ என்று நொந்ததுண்டு. இது அவசியம் வேர்டு பயன்படுத்துபவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
வேறு சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க வேண்டும். உங்கள் மெயில் ID எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு contact create பண்ணுங்களேன் ப்ளீஸ்.

Dhosai said...

good information.... thanks

பிரவின்குமார் said...

அருமைங்க நண்பரே..! அதிலும் உதாரணம் மிக அருமை.. அப்படியே வெற்றிக்கொடிகட்டு பார்த்திபன் வடிவேலு கண்முன்ன வந்த நின்னாங்க..!!(ஹ..ஹா) நகைச்சுவையுடன் பயனுள்ள பதிவு..! இப்படியே மெயின்டெயின் பண்னுங்க.!!!!

Anand said...

Very useful tip !.
Thanks Surya.

இராகவன் நைஜிரியா said...

நன்றி சூர்யா..

உபயோகமான தகவல்

வானம்பாடிகள் said...

ரொம்ப நன்றி தலைவா:)

எஸ்.கே said...

மிக மிக அவசியமான தகவல்! நன்றி சார்!

பிரியமுடன் பிரபு said...

அவசியமான தகவல்

Nazmeer said...

பயனுள்ள பதிவு..வளர்க உங்கள் கணணி சேவை..
இலங்கையிலிருந்து நண்பன்
Nazmeer.

Speed Master said...

Nice one,
I also got trouble with this problem,
Thanks a lot
Wish u all the very best

சிகப்பு மனிதன் said...

.helpful infn, brother !

sivakumar said...

Great ... Nice work....

Sivakaran said...

அருமை நண்பரே..மிக அருமை..இதே மாதிரியான பிரச்சனையுடன் நான் திண்டாடிக்கொண்டு இருந்தேன்..அதனான் அடுத்த Lineக்கு போகும் போது shift+Enterஐ அழுத்திதான் இடைவெளி இல்லாம் செய்வேன்.... மிக்க நன்றி..

ஜிஎஸ்ஆர் said...

அன்பின் சூரியா,

என் தளத்தில் radarurl.com நிறுவ முயற்சிக்கிறேன் ஆனால் அதன் அளவு பெரிதாக இருக்கிறது அதனுடைய ஜாவா ஸ்கிரிப்ட் திறந்தும் கஷ்டமைஸ் செய்யமுடியவில்லை தாங்கள் எப்படி செய்தீர்கள் எனக்கு உதவ முடியுமா?

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

தமிழ்தோட்டம் said...

மிகவும் பயனுள்ள தகவல்

தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம்
http://tamilthottam.nsguru.com

Tech Shankar said...

super

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)