Tuesday, 12 October, 2010

மைக்ரோசாப்ட் Word உதவி!

மைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டினை பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். இந்த இடுகையில் தரப்பட்டுள்ள தகவல்கள் பலரும் முன்பே அறிந்திருந்தாலும், அறியாத சிலருக்காக.. 
ஒரு வியாபார ஒப்பந்தம், வீட்டு வாடகை / போக்கியம், வீடு நிலம் விற்பது வாங்குவது தொடர்பான ஒப்பந்தகளை நாம் அரசு பத்திரத்தாளில் பிரிண்ட் செய்வது வழக்கம். இந்த செய்கையின் போது, முதல் பக்கம் அல்லது முதல் இரு பக்கங்கள் பத்திரத் தாளிலும், ஏனைய பிற பக்கங்கள் பச்சை நிற Legal அளவுள்ள தாளிலும் அச்சிடுவது வழக்கம். 
வழக்கமான இந்திய பத்திரத் தாள்கள் டாப் மார்ஜின் 6" ஆக இருக்கும். இதன் முதல் பக்கத்தில் தட்டச்சு துவங்குவதற்கு முன்பாக, வேர்டில் ரிப்பன் மெனுவில் Page Layout பகுதிக்கு சென்று Margins பொத்தானை அழுத்தி Custom margins சென்று Margins டேபில் Top Margin 6" எனவும் Paper டேபில் சென்று A4 எனவும் தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தி பின்னர் தட்டச்சு செய்யலாம். 

இதன் மூலம் பத்திரத்தாளில் அரசாங்க முத்திரை மீது எழுத்துக்கள் அச்சாகாமல் தவிர்க்கலாம். (ஒரு அளவுகோளை எடுத்து டாப் மார்ஜினை அளந்து கொள்வது நல்லது) 


முதல் பக்கம் தட்டச்சு செய்து முடித்த பின்னர் அடுத்த பக்கம் LEGAL அளவுள்ள பேப்பர் எனில், அதன் டாப் மார்ஜின் மற்றும் பேப்பர் அளவுகள் மாறும் என்பதால், முதல் பக்கத்திலிருந்து அப்படியே தொடர்வது உசிதமல்ல. Page Layout பகுதிக்கு சென்று Breaks பட்டனை அழுத்தி மெனுவில், Section Break இற்கு கீழாக உங்கள் வசதிக்கு தேவையான அடுத்த பக்கத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

இது முழுவதுமாக புதிய section என்பதனால், இந்த பக்கத்திற்கு மட்டும் Paper Size ஐ Legal என்றும் Margin களை உங்கள் தேவைக்கு ஏற்பவும் மாற்றிக் கொள்ளலாம். இப்படி மாற்றும் பொழுது முதல் பக்கத்தின் page setup முற்றிலும் வேறாக இருக்கும். இந்த பக்கத்தில் தொடர்ந்து தட்டச்சு செய்து கொள்ளலாம். 

முதல் பக்கம் பிரிண்ட் செய்யும் பொழுது முதலில் ஒரு வெள்ளைத் தாளில் பிரிண்ட் செய்து அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதி படுத்திக் கொண்டபிறகு பத்திரத்தாளில் பிரிண்ட் செய்து கொள்ளவும். 

இந்த section break வசதி நமக்கு வேறொரு வகையில் பேருதவியாக இருக்கும். வழக்கமாக நாம் வேர்டு டாக்குமெண்டில் Header/Footer கொடுக்கும் பொழுது அனைத்து பக்கங்களுக்கும் ஒரே Header/Footer தான் வரும். ஆனால் இந்த Section Break வசதியை பயன்படுத்தி வெவ்வேறு பக்கங்களுக்கு வெவ்வேறு Header / Footer களை அமைக்க முடியும்.  இந்த வசதியை மற்றொரு வகையிலும் பெற முடியும். Insert ரிப்பனில் Header பட்டனை க்ளிக் செய்து இறுதியில் உள்ள Edit Header பட்டனை க்ளிக் செய்து, பின்னர் Design ரிப்பன் டேபில் Different First page எனும் check box ஐ க்ளிக் செய்தாலும் போதும். 

வெவ்வேறு பக்கங்களுக்கு வெவ்வேறு Header/Footer களை அமைக்கமுடியும். 

டிப்ஸ்:- 
அ. தேவையான டெக்ஸ்டை தேர்வு செய்து Ctrl+Shift+A அழுத்த Capitalize செய்ய முடியும். 
ஆ. டிகிரி சிம்பலை (45º) உருவாக்க தேவையான இடத்தில் Alt கீயை அழுத்தியபடி Number pad -இல் 167 அடித்தால் போதுமானது. 

.           


9 comments:

சிங்கக்குட்டி said...

பகிர்வுக்கு நன்றி கண்ணன் :-).

பாலாஜி சங்கர் said...

º it was i dont know thanks for sharing

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான விரிவான விளக்கம்.வாழ்த்துக்கள்.
( செலெக்ட் செய்து பிரிண்ட் கொடுக்கும் போது இரண்டு பேஜ் ஒன்றாக வருகிறது, டைப்பண்ண பேஜும் அடுத்து ஒரு பிளாங்க் பேஜும் அதுக்கு என்ன செய்வது?

எசாலத்தான் said...

நண்பர் சூர்யா அவர்களுக்கு வணக்கம்.எனது கணினியில் சில folder களை open செய்யும்பொழுது task bar மறைந்து பின் மீண்டும் வருகிறது.இது ஏன்? இதை சரி செய்ய வழியிருந்தால் சொல்லுங்கள்.நன்றி .

siddhadreams said...

குறிப்புகளுக்கு நன்றி. alt+1 அழுத்தியவுடன் save as box வருகிறது.

வானம்பாடிகள் said...

கன்னு:). நன்றி தலைவா.

மதுரை பொண்ணு said...

டெய்லி அப்டேட் செய்வதற்கு நன்றி.

BPL said...

THESE TIPS ARE VERY MUCH USEFUL TO ME. I CHECKED ONCE. BUT I HAVE TO CHECK THE TIPS ON HEADER & FOOTER LATER. THAT IS VERY ESSENTIAL FOR ME.

THANKS FOR THESE USEFUL INFO.

REGARDS

SRI said...

Really useful tips. Header and Footer facility to be tried.

regards.

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)