Monday, 18 October, 2010

Default OS: விண்டோஸ் 7 / விஸ்டாவா அல்லது எக்ஸ்பியா

விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 என புதிது புதிதாக மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளங்கள் வந்தாலும், பலரும் எக்ஸ்பி விரும்பிகளாகவே இருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. கணினியை அப்க்ரேட் செய்ய வேண்டிய கட்டாயம். புதிதாக ஒரு சிலவற்றை கற்றுக் கொள்வதில் உள்ள சோம்பல். தற்பொழுது சந்தையில் வரும் பெரும்பாலான மடிக்கணிகள் விண்டோஸ் 7 - 64 பிட் இயங்குதளத்துடன் கிடைப்பதால், ஏற்கனவே நம்மிடம்  உள்ள ஆட்டோ கேட், 3டி ஸ்டுடியோ போன்ற 32 பிட் மென்பொருட்களை இயக்குவதற்கு என பல காரணங்களால், விண்டோஸ் 7 அல்லது விஸ்டா இயங்குதளம் இருந்தாலும் அதனுடனாக விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தையும் இரட்டை பூட்டிங் முறையில் வைத்துக் கொள்வது இன்று பலரும் பயன்படுத்தி வரும் நடைமுறையாகும். இப்படி இரண்டு இயங்குதளங்களை தங்களது கணினியில். பதிந்து வைத்திருப்பவர்கள். ஒரு குறிப்பிட்ட இயங்குதளத்தை உதாரணமாக, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி ஆகிய இரண்டையும் நிறுவி வைத்திருப்பவர்கள், விண்டோஸ் எக்ஸ்பியை முதன்மை படுத்த (Default OS ஆக மாற்ற), என்ன செய்யவேண்டும் என்ப்தை பார்க்கலாம். இப்படி இரண்டு OS களை வைத்திருப்பவர்கள், விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 இவற்றில் எது பிந்தைய பதிப்போ, அந்த இயங்குதளத்தில் பூட் செய்து கொள்ளுங்கள். Start க்ளிக் செய்து, Computer -இல் வலது க்ளிக் செய்து, Properties செல்லுங்கள்.

அடுத்து திறக்கும் திரையில் Advanced System Settings லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.


அடுத்து Startup and Recovery பகுதியில் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.


இப்பொழுது திறக்கும் Startup and Recovery திரையில் Default Operating System என்பதற்கு கீழாக உள்ள லிஸ்ட் பாக்ஸில் முதன்மை படுத்த வேண்டிய இயங்குதளத்தை தேர்வு செய்து, Apply செய்தால் போதுமானது..

12 comments:

எஸ்.கே said...

மிக உபயோகமான தகவல்!

வானம்பாடிகள் said...

ஆஹா. நன்றி தலைவா.

மதுரை பொண்ணு said...

தல சூப்பர்.உண்மையிலே எனக்கு இந்த ப்ராப்ளம் இருந்து வந்துச்சு.இப்ப ஓகே.தல நீங்க மட்டும் எப்படி இப்பிடி அறிவா இருக்கீங்க.

கக்கு - மாணிக்கம் said...

விஸ்டா சரியாக போணியாக வில்லை என்றவுடன் அதன் லோகோவை மாற்றி இங்கும் அங்கும் சில அனிமேஷன் வேறுபாடுகளை செய்து , கலரை மாற்றி விண்டோவ்ஸ் -7 என பெயர் வைத்து மார்கெடிங் செய்கிறார்கள் என்று சொன்னால் மைக்ரோ சாப்ட் காரர்கள் என்னை அடிக்க வருவார்கள். ஆனால் அதுதான் உண்மை. சமீபத்தில் விஸ்டா ஹோம் பெசிக் -64 பிட்ஸ் என்று மாற்றி விட்டு போனார் நண்பர். சில மென் பொருள்கள் இந்த அமைப்பில் திறப்பதே இல்லை. என்னிடம் உள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் நமது கூகிள் எர்த் . இதே கதைதான் விண்டோவ்ஸ் -7 னிலும். வலையில் சென்று பார்த்தால் இவைகளை வைத்துள்ள அனைவரும் போர்டலில் ஒரே மாதிரி ஒப்பாரிதான்.

PAATTIVAITHIYAM said...

Super. Thank You.

thiruthiru said...

தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களது தனி மெயில் முகவரி தெரியாததால் இங்கு ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.
தவறுதலாக ஒரு ப்ரோக்ராமை uninstall செய்துவிட்டேன். அதற்குரிய CD/file என்னிடம் இல்லை. system restore லும் மீட்க முடியவில்லை. அதை மறுபடியும் இயங்க வைக்க ஏதேனும் வழி உண்டா?

RK நண்பன்.. said...

Usefull Info anna... thanks for sharing.....

பதிவுலகில் பாபு said...

நல்ல தகவல்..

பிரஷா said...

பயனுள்ள தகவல்..

Rajkumar said...

super.

Rajkumar said...

Super

Rajkumar said...

Dear Sir,
I cannot read your old Posts(I mean Jul 08,2010 Below that) When i click your old post, it's saying "Sorry, the page you were looking for in the blog சூர்யா கண்ணன் does not exist."
Please tell me sir how to open your old posts. Any other option is there?
Can you email to this address? avoorraj@gmail.com.

By
Kumar.

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)