Thursday 1 July 2010

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான வேதியல் நீட்சி

எனது கடந்த இடுகையான "மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி" ஐ வாசித்த வேதியல் துறையில் பணியிலிருக்கும் நண்பர் ஒருவர், 'கணிதத்திற்கு நீட்சி உள்ளது போல வேதியல் சமன்பாடுகள், வரைபடங்களை கையாள வேறு ஏதேனும் வழியுள்ளதா'   என்ற கேள்வி எழுப்பியிருந்தார். 

உள்ளது என்பதே, பதில்! 
வேதியல் சமன்பாடுகள் மற்றும் மூலக்கூறுகளின் வரைபடங்களை சிறந்த முறையில்  மைக்ரோசாப்ட் வேர்டு பயன்பாட்டில் உருவாக்க, வேதியல் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு தீர்வாக, Microsoft’s new Education Labs சமீபத்தில் வெளியிட்டுள்ள Chemistry Add-in for Word 2007 and 2010 (பீட்டா வடிவில்) அமைந்துள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த நீட்சியை தரவிறக்கி நிறுவும்பொழுது, Visual Studio Tools for Office 3.0 ஐ நிறுவ வேண்டும் என்ற செய்தி வரும். இந்த வசனப்பெட்டியில் Yes கொடுத்து நிறுவிக்கொள்ளுங்கள். 

இதை நிறுவிய பிறகு, உங்கள் வேர்டு 2007 ரிப்பன் மெனுவில் புதிதாக Chemistry மெனு தோன்றியிருப்பதை காணலாம். 

      
இந்த நீட்சியை பயன்படுத்தி வேதியல் சமன்பாடுகள், வரைபடங்களை   எளிதாக உருவாக்க இயலும் 

மூலக்கூறு வடிவம். 


இதற்கு மேல் வேதியல் துறையில் எனக்கு அறிவு இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு விளக்கமாக இந்த இடுகையை தொடர இயலவில்லை.   துறையை சார்ந்தவர்கள் இந்த வசதியை உபயோகித்து பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். 


(வேதியல் துறையை சாராதவர்களும் ஓட்டுப் போடலாம்.)


. 

6 comments:

Thomas Ruban said...

//(வேதியல் துறையை சாராதவர்களும் ஓட்டுப் போடலாம்.)//ஓட்டு போட்டாச்சி சார்.

வானம்பாடிகள் said...

நன்றி தலைவா.

suthanthira.co.cc said...

//(வேதியல் துறையை சாராதவர்களும் ஓட்டுப் போடலாம்.)//ஹா ஹா

ஜெய்லானி said...

################உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..http://kjailani.blogspot.com/2010/07/blog-post.htmlஅன்புடன் > ஜெய்லானி <################

கக்கு - மாணிக்கம் said...

எனக்கு பயன்படும் பதிவு. வேதியியல் சமன் பாடுகளை கணனியில் எழுத்தும் போது படுத்தி எடுக்கும்.இதற்காக நான் Adobe Page Maker ஐ நாடுவதுண்டு . அதிலும் நேரம் நிறை எடுத்துக்கொள்ளும் .பகிர்வுக்கு நன்றி சூர்யா.வோட்டும் போட்டாச்சு வழக்கம் போல !:)

jokkiri said...

சூர்யா

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி...

உங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பதிவு போட்டுள்ளேன்...

நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்...

”அப்பீட்” ஆன நான் மீண்டும் “ரிப்பீட்” ஆனேன்.....
http://jokkiri.blogspot.com/2010/08/blog-post.html

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)