Saturday, 31 July, 2010

பிளாக்கர் டிப்ஸ்: உங்கள் ப்ளாக்-ஐ குறித்த மேலதிக தகவல்கள்

நமது பிளாக்கை குறித்தான மேலதிக தகவல்களை பெற கூகிள் அனலிடிக்ஸ் வசதியை பயன்படுத்தி வந்தோம். இந்த வசதியை பயன்படுத்தி, நமது பதிவுகளுக்கான வாசகர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வளவு? எந்த தளத்தின் மூலமாக எவ்வளவு டிராபிக், குறிப்பிட்ட ஒரு இடுகையை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? எந்த உலாவி, எந்த இயங்குதளம், எந்த குறிச்சொல்லை வைத்து தேடி நமது பிளாக்கை அடைந்திருக்கிறார்கள் என்பது போன்ற பல உபயோகமான தகவல்களை பெற்று வந்தோம். 

இந்த வசதி சமீப காலமாக Blogger இலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பலரும் அறிந்த ஒன்றாகும். இது கூகிள் அனலிடிக்ஸ் ஐ விட எந்த வகையில் பயனுள்ளது? என்று பார்க்கும் பொழுது, ஒரு முக்கியமான வசதியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. வழக்கமாக நமது ப்ளாக்கிற்கு நாம் ஒரே அடைப்பலகையை வைத்து நாம் திருப்தி அடைவதில்லை, அவ்வப்பொழுது நமது அடைப்பலகையை நாம் நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதுண்டு. 

கூகிள் அனலிடிக்ஸ் வசதியை நமது பிளாக்கில் பயன்படுத்த, அந்த தளத்தில் நமது ப்ளாக்கிற்காக, வழங்கப்படும் HTML code னை நமது அடைப்பலகை Code -ல் இணைக்க வேண்டும். அதன் பிறகே நமது ப்ளாக் track செய்யப்படும். நாம் ஒவ்வொரு முறையும் அடைப்பலகையை மாற்றும் பொழுதும் மறக்காமல் இந்த கோடை இணைக்க வேண்டியது அவசியம். ஆனால் ப்ளாக்கரில் தரப்பட்டுள்ள இந்த வசதியில் நமக்கு இந்த தொல்லை இல்லை. 

இந்த வசதியை பெற, பலரும் வழக்கமாக செல்லும் www.blogger.com தளத்திற்கு செல்லக் கூடாது. அதற்கு மாறாக, http://draft.blogger.com தளத்திற்கு செல்லுங்கள்.

அங்கு Make Blogger in Draft my default dashboard என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். புதிதாக வந்துள்ள Stats என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் திரையில் உங்களது அந்த குறிப்பிட்ட பிளாக்கின் டிராபிக் தகவல்கள் அனைத்தையும் Overview, Posts, Traffic Sources & Audience ஆகிய டேப்களில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

       
இதில் Audience டேபில் சென்று நமது ப்ளாக் எந்தெந்த உலாவிகளில் எத்தனை சதவீதம் பேர் பார்க்கிறார்கள் என்ற தகவலை தெரிந்து கொண்டு, அதற்கேற்றார்போல, நமது அடைப்பலகையை மாற்றியமைக்க சௌகரியமாக இருக்கும்.

இந்த வசதி பிளாக்கர் கணக்கிலேயே உள்ளது என்பதனால் இதற்காக எந்த HTML Code ஐயும் நமது அடைபலகையிலோ அல்லது விஜிட்டிலோ இணைத்துக் கொள்ள அவசியமில்லை.


. 

Friday, 30 July, 2010

IE உலாவியில் Spell Checker

நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, ஆங்கில வலைப்பக்கங்களில், ஏதாவது பின்னூட்டங்கள் இடும் பொழுதோ, ஏதேனும் ஃபாரத்தில் தட்டச்சு செய்யும் பொழுதோ நமக்கு வேர்டு போன்றவற்றில் உள்ளது போல Spell Checker வசதி இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதுபவர்களுக்கு, Internet Explorer உலாவியில் பயன்படுத்தக் கூடிய ஒரு எளிய மென்பொருள். ieSpell இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசமாக கிடைக்கிறது. தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 


இதனை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, புதிய அப்டேட்கள் தேவையெனில் அந்த தளத்திலிருந்து அப்டேட் செய்து கொள்ளலாம். 


நிறுவிய பிறகு IE உலாவியில், இந்த பொத்தானை டூல்பாரில் (Customize Toolbar)  பதிந்து கொள்ளுங்கள். 

   
இப்படி  உங்கள்  டூல்பாரில் பதிந்து கொண்ட பிறகு Spell check தேவையான சமயத்தில் இந்த பொத்தானை க்ளிக் செய்வதன் மூலமாகவோ, 

   
அல்லது Tools மெனுவில் iespell க்ளிக் செய்வதன் மூலமாகவோ இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 


இந்த கருவி உபயோகிக்க எளிதாக இருப்பதால், ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளை தவிர்த்து பயன் பெற முடியும். 


மேலும் இது குறித்து தரப்பட்டுள்ள தகவல்கள்:- 
 • Completely standalone spell checker for your web browser. Does not require Microsoft Office or any other third party components.
 • Integrates flawlessly with Internet Explorer and other IE based browsers.
 • Three ways to start the spell check; via the right click context menu, the toolbar or the menu bar.
 • Supports a wide range of web applications including simple text forms, rich text editors, forums, blogs, webmail (including Outlook Web Access and Lotus iNotes) and more!
 • Spell check in any of the 3 variants (US, UK and Canadian) of the English Language!
 • Suggestions are sorted by the degree of closeness with the misspelled word.
 • Intelligent suggesting for misspelled words using typographic “looks like” matching.
 • Easily add/remove your personal words in ieSpell via an intuitive user interface!
 • Organise your personal words in individual custom dictionaries! Share them with your friends and co-workers over the network!
 • Integrates with Microsoft Office's proofing tools. Have ieSpell share the same copy of the custom dictionary so that when you add/remove your personal words in ieSpell, the same is reflected in Microsoft Office and vice versa!
 • ieSpell suggested a word that you are not familiar with? Look up its meaning in an online dictionary!
 • Powerful API for web application developers.
  • Force users to spell check the document before submission.
  • Ignore certain text fields.
  • Refuse a form submission if the user cancels the spell check!

நெருப்பு நரி உலாவியில் இது போன்ற பிழை திருத்தி குறித்த எனது மற்றொரு இடுகை நெருப்புநரியில் பிழைதிருத்தி
 


.

Wednesday, 28 July, 2010

பென் டிரைவ் பாதுகாப்பு - Autorun.inf

இப்பொழுது அனைவரின் கைகளிலும் பென் டிரைவ் புழங்குவது, நமது தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு சிறு அடையாளமே.ஒரு  குறிப்பிட்ட  கணினியிலிருந்து, தங்களுக்கு தேவையான தகவல்களை உடனடியாக சேமித்துக் கொள்ள CD/DVD ஆகியவற்றை விட ஒரு சிறந்த எளிய சாதனமாக இருப்பது இந்த Flash/Pen டிரைவ்கள்தான்.


ஆனால், இந்த பென் டிரைவ்களின் மூலமாகவே பெரும்பாலான NewFolder.exe virus, kinza.exe virus, W32.Rontokbro.B@mm virus,  Regsvr.exe போன்ற வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் வெகு விரைவாக உங்கள் கணினியை தாக்குகின்றன. இது போன்ற மோசமான பாதிப்புகளை உருவாக்கக் கூடிய இந்த வைரஸ்கள் விரைவாக, நமது கண்காணிப்பை மீறி நமது கணினியில் பரவுவதற்கு அதில் உள்ள Autorun.inf என்ற ஃபைல் தான் முக்கிய பங்காற்றுகிறது. அப்படி என்னதான் சக்தி இருக்கிறது இந்த Autorun.inf கோப்பில் என்று பார்த்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் windows 95 பதிப்பு வெளி வந்த பொழுது, இது புழக்கத்திற்கு வந்தது. அதாவது, விண்டோஸ் 95 இயங்குதளத்தில்  CD யை திறப்பதற்கு முன்பாகவே அல்லது அந்த சிடியை My Computer -ல் இரட்டை க்ளிக் செய்யும் பொழுது,    இந்த Autorun அந்த CD யின் ரூட் டைரக்டரியில் உள்ள Autorun.inf  கோப்பை படித்து அதில் தரப்பட்டுள்ள கட்டளைகளை செயல்படுத்தும் பங்காற்றுகிறது. உதாரணமாக கீழே தரப்பட்டுள்ளது ஒரு Autorun.inf கோப்பில் உள்ள கட்டளைகள்.

[autorun]
open=autorun.exe
icon=autorun.ico
label= My Thumb Drive(98XXXXXXXX)
   

ஒரு பாதிக்கப்பட்ட பென் ட்ரைவை நல்லதொரு Antivirus மற்றும் Anti malware  உள்ள கணினியில் திறந்து, Tools -> Folder Options சென்று Show hidden files and folders க்ளிக் செய்து விட்டு, அதில் உள்ள கோப்புகளின் விவரங்களை பார்க்கும் பொழுது,


Hidden வடிவில் அந்த பென் டிரைவில் உள்ள வைரஸ்களை (நமக்கு சம்பந்தமில்லாத / நாம் உருவாக்காத கோப்புகள்) காண முடியும். (இப்படி காண்பிப்பது போல, வைரஸ் தாக்கப்பட்ட கணினியில் காண்பிக்காது. அவற்றில் Folder Options வசதி நீக்கப் பட்டிருக்கும்.) இவற்றை நமது கணினியில் ஏற்றுகின்ற வேலையை இந்த Autorun.inf கோப்புகள் செய்கின்றன. 

இப்படி சந்தேகமுள்ள பென் ட்ரைவ்களை நமது கணினியில் இணைத்த பிறகு, நேரடியாக My Computer -இல் சென்று திறக்காதீர்கள். Start -> Run இற்கு சென்று அந்த பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை கொடுங்கள் (H:) இனி திறக்கும் Explorer -இல் மேலே குறிப்பிட்டிருப்பது போல, Show hidden files and folders என்ற வசதியை enable செய்து கொள்ளுங்கள். இனி அந்த பென் டிரைவில், உங்களுக்கு சம்பந்தமில்லாத, .EXE கோப்புகள் ஸ்கிரிப்ட் கோப்புகளை shift+del கொடுத்து நீக்கி விடுவது நல்லது.      

இது போன்ற தாக்குதல்களிலிருந்து நமது கணினியை காக்க No Autorun என்ற இலவச கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இந்த மென்பொருள் கருவியை நமது கணினியில் பதிந்து கொள்வதன் மூலமாக இது போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பலாம்.


.

Tuesday, 27 July, 2010

வடை கிடைச்சுடுச்சு!..

கடந்த 17-07-2010 அன்று எனது ஜிமெயில், யாஹூ, rediff, Facebook, Twitter, Orkut, Blogger என எனது அனைத்து கணக்குகளும் ஒரே இரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே! 

அதன் பிறகு, மற்றொரு கணக்கை உபயோகித்து, தற்காலிகமாக (http://sooryakannan.blogspot.com) என்ற வலைப்பூவை ஆரம்பித்தேன். எனது அந்த இக்கட்டான சூழ்நிலையில் வலையுலக நண்பர்கள்  எனக்கு அளித்த ஆதரவும், ஆறுதலும் என்னை பிரமிக்க வைத்தது.

தொடர்ந்த கடின முயற்சிக்குப் பிறகு, மறுபடியும் எனது ஜிமெயில் கணக்கை  மீட்டெடுத்து விட்டேன். ஜிமெயிலில் Recovery Form மற்றும் options எதுவும் பயனளிக்கவில்லை. ஜிமெயில் தளத்தில் உள்ள எந்த லின்க்கும் பயன்படவில்லை, எப்படி மீட்டெடுத்தேன் என்பதை தற்பொழுது உங்களோடு  பகிர்ந்து கொள்ள போவதில்லை. ஏனென்றால் மீட்டெடுப்பதற்கான அந்த வழியையும், ஹேக்கர்கள் அறிந்து கொள்ளுவதால், பாதிப்பு நம்மை போன்றவர்களுக்குத்தான். எனவே எவருக்காவது இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.

தொலைபேசியில் விசாரித்து ஆறுதல் அளித்த நண்பர்கள். தங்களது வலைப்பூவில் எனது இந்த மற்றம் குறித்த செய்தியையும், லிங்கையும் கொடுத்து, நான் சோர்ந்து போகாமல், எனக்கு உத்வேகமளித்த நண்பர்களே! உங்களுக்கும் எனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிலிஷ் (இன்ட்லி) க்கும்   மனம் நெகிழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சூர்யா கண்ணன்
     


   

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!
அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது. இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர், பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.


தகவல் - நன்றி நிலாமுற்றம் 
படங்கள் - நன்றி google images 

BrainPort Vision Technology


 .

Friday, 9 July, 2010

அடடா வடை போச்சே! - Blogger Backup - இலவச கருவி

ஒரு பதிவராக நமது பிளாக்கை பத்திரமாக வைத்துக் கொள்வது சில சமயங்களில் சற்று சிரமமான காரியம்தான். நமது ஒவ்வொரு இடுகைகளும் நமது எண்ணங்களின், சிந்தனைகளின், ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாக உள்ளது என்பதும், இவையனைத்தும் நமது அந்தரங்க டைரியை விட மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்பதனையும் எவராலும் மறுக்க முடியாது. 

உங்கள் பிளாக்கில் நூற்றுக் கணக்கில் இடுகைகளை வைத்திருப்பீர்கள், திடீரென ஒரு நாளில் இவையனைத்தும் தொலைத்து விட்டு அடடா என் பிளாக்கை காணோமே.. இடுகைஎல்லாம் போச்சே என்று புலம்பி கொண்டிருப்பது சிலருக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இதற்கு ஒரு நல்ல தீர்வாக Blogger Backup எனும் சுதந்திர இலவச மென்பொருள் அமைந்துள்ளது ஒரு வரப்பிராசாதம் தான். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)

இந்த சிறிய மென்பொருள் கருவியை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு இதனை திறந்து, 
 
Available Blogs என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Add/Update/Remove blog என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

இனி Log into Blogger to get and add your blogs டேபில் உங்கள் பிளாக்கர் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து கீழே உள்ள பட்டனை க்ளிக் செய்யுங்கள். அல்லது OR Manually add or edit a Blogger blog டேபை க்ளிக் செய்யுங்கள். (நான் கீழே உள்ள விளக்கப் படங்களில் இரண்டாவது முறையை கொடுத்துள்ளேன்.) 

இரண்டாவது வழியில்Blog Title/Name, Blogger Blog URL ஆகியவற்றை கொடுங்கள், Blogger Feed URL தெரிந்தால் கொடுங்கள், இல்லையெனில் Get Feed URL பட்டனை அழுத்தி பெற்றுக்கொண்டு, Add/Update Blog பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 

இனி அடுத்த திரை உங்கள் ப்ளாக் விவரங்களை காட்டும், இதில், உங்கள் வன்தட்டில் எந்த ட்ரைவில் உள்ள ஃபோல்டரில்  சேமிக்க வேண்டும் என்பதை கொடுங்கள். மேலும் பின்னூட்டங்களை சேமிக்க வேண்டுமெனில், Save Comments check box ஐ டிக் செய்யுங்கள். இப்படி சேமிக்கும் இடுகைகளை ஒரே கோப்பில் சேமிக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு இடுகைக்கும் ஒவ்வொரு கோப்பை உருவாக்க வேண்டுமா என்பதை Save posts as format என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலதிக விவரங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டு Backup posts என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 


இப்பொழுது உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு இடுகைகளும், பின்னூட்டங்களும் Backup ஆக துவங்கும். இது அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை, எனது பிளாக்கில் 240 க்கு மேற்பட்ட இடுகைகளை Backup எடுக்க ஐந்து நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. 

 
இப்படி பேக்கப் எடுக்கும் பொழுது உங்கள் ஒவ்வொரு இடுகைகளும் ஒவ்வொரு XML கோப்புகளாக உங்கள் கணினியில் சேமிக்கப் படுகிறது. 


அவ்வளவுதான்! இனி எப்பொழுதாவது உங்கள் இடுகைகளை தொலைத்து விட்டு 'அடடா வடை போச்சே!.. என்று தலையில் கை வைப்பதை விட்டுவிட்டு மௌஸில் கை வைத்து, இதே மென்பொருள் கருவியை பயன் படுத்தி உங்கள் இடுகைகளை Restore செய்து கொள்ளுங்கள்.   .

Thursday, 8 July, 2010

ஆன்லைனில் PAN Card ரூ. 94/- NRI - ரூ.744/- மட்டுமே

பத்து வருடங்களுக்கு முன்பாக நான் PAN Card பெற முயன்ற பொழுது, (உடனடியாக ஒரு டீலர்ஷிப் எடுப்பதற்காக) Income Tax அலுவலகத்தில், வியாபாரிகளின் கணக்குகளை சரிபார்த்து சமர்ப்பித்து வரும் ஒரு தனியார் கணக்கரிடம், ரூ. 350/- கொடுத்து, பிறகு ஒரு மாதத்திற்கு பிறகு பான் கார்டு பெறப்பெற்றேன்.   

ஆனால், அதில் First name, Last name உல்டாவாகி, பெயரே தலைகீழாக மாறிப்போய், உடனடியாக வேறு யாரும் டீலர்ஷிப் எடுக்க முயல்வதற்குள்ளாக, ஏதாவது செய்ய வேண்டுமே என்று, மறுபடியும் பல கடிதங்கள் மற்றும் ரூ. 500/-  மேலாக செலவழித்து மீண்டும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சரியான பெயரில் பான் கார்டு கிடைக்கப் பெற்றேன். 

ஆனால் தற்பொழுது பான் கார்டு பெறும் வழி மேலும் எளிதாக்கப் பட்டுள்ளது. மேலும் ஆன்லைனிலேயே பெறும் வகையில் UTI நிறுவனம் இந்த வசதியை நமக்கு எளிதாக்கியுள்ளது. 

 
இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூ. 744/- மட்டுமே பெறப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், நாமே நிரப்புவதால் பல பிழைகள் தவிர்க்கப் படுகின்றன. இந்த தளத்தின் மூலமாக மட்டுமின்றி, வேறு எப்படி  Apply செய்த பான் கார்டின் Status ஐ அறியவும் PAN Verification என்ற வசதி தரப்பட்டுள்ளது இந்த தளத்தின் தனிச் சிறப்பு.  


UTI Technology Services Limited


.

Wednesday, 7 July, 2010

ஃபோல்டரை உருவாக்கத் தெரியுமா?

என்ன இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டேன் என்று கோபப் படாதீர்கள் நண்பர்களே!.

உங்கள் கணினியில் ஏதாவது ஒரு ட்ரைவில் அல்லது டெஸ்க்டாப்பில் ஒரு  ஃபோல்டரை உருவாக்க வேண்டும். அதன் பெயர் CON என்று இருக்க வேண்டும். முடியுமா? 

விண்டோஸ் இயங்குதளத்தில் con, prn போன்ற பெயர்களில் ஃபோல்டர்களை உருவாக்க முடியாது, என்பது எங்களுக்கு தெரியாதா, என்று நீங்கள் என்னை முறைப்பது தெரிகிறது..   

கேள்வி அதுவல்ல. இந்த பெயரில் நான் உருவாக்கிய ஃபோல்டரின் ஸ்க்ரீன்ஷாட் ஐ பாருங்கள். இது போட்டோஷாப் வேலை அல்ல.


இது எப்படி உருவாக்கப் பட்டது என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


சரியான பதிலை யார் சொல்கிறார்கள் என்பதை மற்றொரு இடுகையில் பார்ப்போம்.

.

Tuesday, 6 July, 2010

100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில்

100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில்... Ubuntu Linux Help

இதில் Linux க்கு மட்டுமின்றி பல மென்பொருட்கள் விண்டோஸ்  இயங்குதளத்திற்கும் சேர்த்து தரவிறக்க கிடைப்பது தனி சிறப்பு. நண்பர்களே! .. உங்களுடைய பின்னூட்டங்களை Publish செய்யும் பொழுது ஏதோ சிறு பிரச்சனை எழுகிறது.. பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. பின்னூட்டங்கள் Publish ஆகவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்.

Monday, 5 July, 2010

ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு

ஜிமெயில் கணக்கில் உங்களுக்கு Paypal மற்றும் eBay போன்ற பண பரிவர்த்தனை செய்ய உதவும் தளங்களிலிருந்து, வரும் மின்னஞ்சல்கள் உண்மையாகவே அந்த தளத்திலிருந்துதான் வருகிறது என்று எப்படி நம்ப முடியும்? 

இப்படி உங்களுக்கு வந்த மின்னஞ்சலில் உள்ள சுட்டிக்கு சென்று, உங்கள் கணக்கு விவரங்களை அளிக்கிறீர்கள். (அச்சு அசலில் Paypal / eBay தளத்தைப் போலவே இருக்கும்) அதில் நீங்கள் அளிக்கும் விவரங்களை களவாடிக்கொண்டு,  உங்களுக்கு பெரிய அளவில் ஒரு ஆப்பு வைத்தால்... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.    

மின்னஞ்சல் சேவையில் பல சிறப்பு வசதிகளை இலவசமாக வழங்கிவரும், கூகிள் (ஜிமெயில்) இதைப் பற்றி சிந்திக்காமல் இருக்குமா? 

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது மேற்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்து, 

Labs பகுதிக்கு செல்லுங்கள். 

அங்கு Authentication icon for verified senders என்ற பகுதிக்கு செல்லுங்கள். 


இதை Enable செய்து விட்டால் போதும். இனி ஜிமெயில் Paypal மற்றும் eBay தளங்களைப் போன்ற பெயர்களை தாங்கிவரும் போலி மெயில்களை ஃபில்டர் செய்து விடும். 

 
 தற்சமயம் ஜிமெயில் இந்த வசதியை PayPal மற்றும் eBay கணக்குகளுக்கு மட்டுமே அளித்துள்ளது. 


ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்யாதவர்களுக்கும் ஓட்டுரிமை உண்டு..

.

Saturday, 3 July, 2010

MS Project எளிதாக, இலவசமாக கற்றுக் கொள்ள

இந்த கணினி யுகத்தில் மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் என்ற பயன்பாடு, படித்து முடித்து, வேலை தேடுபவர்கள், தேடிப் பிடித்து  போய் படிக்கும் பயன்பாடுகளில் ஒன்று. 

இதனை இலவசமாக, எளிதாக (ஆங்கிலத்தில்) கற்றுத்தருகிறது ஒரு வலைப்பூ!   (சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). 
Project Management என்பது குறித்தான எளிய விளக்கங்களுடன் துவங்குகிறது பாடம். 


" For example, when you start thinking about moving an office, you probably realize that it can be quite complex. There are many dependencies, such as if you committed to be out of the current space by a certain date, you have to make sure you can go somewhere, ideally to your new space. If the new space is not ready, you have to find another temporary place and/or storage. If you cannot find a mover or schedule phone and other installations, you may need to renegotiate the exit date. If the new space is not entirely ready, you need to carefully plan where and how people will operate. As you can see, there is a lot of complexity in even a simple move. This is a project. Managing it like a project and in the right way will improve your chances for success. Projects require a disciplined yet flexible approach."

ஒரு ப்ராஜெக்ட்டின் முக்கியத்துவத்தை படிப்படியாக விளக்கியபடி தொடருகிறது பாடம். புதிதாக டைம் லைன் ஐ உருவாக்குவது, Task ஒழுங்குபடுத்துவது,
 • Track progress
 • Critical Path Management
 • CPM/PERT
போன்றவற்றை  தெளிவாக படங்களுடன் விவரித்து வருகிறது. 


இதற்காக தனியாக பயிற்சிக்கு சென்று படிக்கவேண்டிய அவசியமின்றி நாமே சுயமாக இத்தளத்தின் உதவியோடு கற்றுக் கொள்ள முடியும். .

Friday, 2 July, 2010

Eraser

நாம் கணினியில் ஒரு கோப்பை அழிக்கிறோம், அதை Recycle bin லிருந்தும் நீக்கி விடுகிறோம்.  அந்த கோப்பு உண்மையில் உங்கள் கணினியிலிருந்து நீக்கப் பட்டு விட்டதா? 

இல்லை என்பதே பதில்! File system Table லில் இருந்து அந்த கோப்பின் reference மட்டுமே நீக்கப் பட்டுள்ளது. அந்த கோப்பு குறிப்பிட்ட ட்ரைவில் எழுதப்பட்டுள்ள இடத்தில் மறுபடியும் ஏதாவது கோப்பு விவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டால் மட்டுமே அந்த கோப்பு உண்மையிலேயே நீக்கப் பட்டுள்ளதாக கருதமுடியும். ஃபோர்மெட் செய்யும் பொழுதும் இதே கதைதான்.

உங்கள் பழைய கணினியை யாருக்காவது விற்கிறீர்கள் அல்லது கொடுக்கிறீர்கள், அல்லது உங்கள் மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுக்கிறீர்கள்,  (இந்த இடுகை சத்தியமாக சாமியார்களுக்கு எழுதப்பட்டதல்ல)  இப்படி கோப்புகள் அழித்ததாக நீங்கள் நினைத்திருக்கும் ட்ரைவிலிருந்து, ஒரு சில மென்பொருட்களைக் கொண்டு எளிதாக திரும்ப எடுத்து விட முடியும். 
அப்படியெனில் கணினியில் ஒரு ட்ரைவில் உள்ள தகவல்களை நிரந்தரமாக அழிப்பது எப்படி? ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது, Eraser எனும் சுதந்திர இலவச மென்பொருள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

 
உங்கள் கணினியில் உள்ள ட்ரைவில் தகவல்களை நிரந்தரமாக அழிப்பதற்க்கான மென்பொருள் இது என்பதால், மிகவும் கவனமாக கையாளவும். .

ஷார்ட்கட் ட்ரிக்ஸ்

வழக்கமாக நாம் விண்டோஸ் இயங்குதளத்தில் ஏதாவது ஒரு ஃபோல்டர் அல்லது கோப்பிற்கு ஷார்ட்கட் உருவாக்கும் பொழுது,

உருவாக்கப்படும் ஷார்ட்கட் இன் பெயர் Shortcut to + அந்த கோப்பின் பெயர் ஆக உருவாகுவதை கவனித்திருப்பீர்கள். உதாரணமாக Test என்ற ஃபோல்டரின் shortcut, Shortcut to Test என உருவாக்கப்படும். 


இது போல விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் Test - shortcut என உருவாக்கப்படும். இப்படி Shortcut to அல்லது Shortcut என பெயரோடு சேர்க்கப் படுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? உதாரணமாக Test என்ற ஃபோல்டருக்கான  shortcut -இன் பெயரும் Test என்றே இருக்க வேண்டும். (அப்படின்னா இரண்டுக்கும் எப்படி வித்தியாசம் தெரியும் என கேட்பவர்களுக்கு - அதான் இடது புற ஓரத்தில் சின்ன அம்புக்குறி வருமே... )

விண்டோஸ் start மெனுவில் Run (விஸ்டா மற்றும் 7 -இல் search box ) சென்று Regedit என டைப் செய்து Registry editor ஐ திறந்துக் கொள்ளுங்கள். அங்கு கீழே தரப்பட்டுள்ள பகுதிக்கு செல்லுங்கள். 

 
HKEY_CURRENT_USER
Software
Microsoft
Windows
CurrentVersion
Explorer
இடது புற பேனில் Explorer ஐ க்ளிக் செய்த பிறகு, வலது புற பேனில், Link என்ற key ஐ இரட்டை க்ளிக் செய்து,   அங்கு அதன் மதிப்பு  1b 00 00 00 (Windows xp) 1e 00 00 00 (Windows 7 / Vista) என்று இருப்பதை முதல் இரண்டு இலக்கங்களையும் 00 என மாற்றி விடுங்கள். அதாவது 00 00 00 00.

இதற்கு மேல் ஒரு முறை Log off அல்லது Restart செய்த பிறகு நீங்கள் உருவாக்கும் ஷார்ட்கட் , அந்த கோப்பின் பெயரிலேயே இருக்கும்.


மறுபடியும் இதை மாற்ற இதே வழியை பின்பற்றி மேலே சொன்ன மதிப்பை பழையபடி மாற்றிக்கொள்ளுங்கள்.


.

Thursday, 1 July, 2010

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான வேதியல் நீட்சி

எனது கடந்த இடுகையான "மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி" ஐ வாசித்த வேதியல் துறையில் பணியிலிருக்கும் நண்பர் ஒருவர், 'கணிதத்திற்கு நீட்சி உள்ளது போல வேதியல் சமன்பாடுகள், வரைபடங்களை கையாள வேறு ஏதேனும் வழியுள்ளதா'   என்ற கேள்வி எழுப்பியிருந்தார். 

உள்ளது என்பதே, பதில்! 
வேதியல் சமன்பாடுகள் மற்றும் மூலக்கூறுகளின் வரைபடங்களை சிறந்த முறையில்  மைக்ரோசாப்ட் வேர்டு பயன்பாட்டில் உருவாக்க, வேதியல் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு தீர்வாக, Microsoft’s new Education Labs சமீபத்தில் வெளியிட்டுள்ள Chemistry Add-in for Word 2007 and 2010 (பீட்டா வடிவில்) அமைந்துள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த நீட்சியை தரவிறக்கி நிறுவும்பொழுது, Visual Studio Tools for Office 3.0 ஐ நிறுவ வேண்டும் என்ற செய்தி வரும். இந்த வசனப்பெட்டியில் Yes கொடுத்து நிறுவிக்கொள்ளுங்கள். 

இதை நிறுவிய பிறகு, உங்கள் வேர்டு 2007 ரிப்பன் மெனுவில் புதிதாக Chemistry மெனு தோன்றியிருப்பதை காணலாம். 

      
இந்த நீட்சியை பயன்படுத்தி வேதியல் சமன்பாடுகள், வரைபடங்களை   எளிதாக உருவாக்க இயலும் 

மூலக்கூறு வடிவம். 


இதற்கு மேல் வேதியல் துறையில் எனக்கு அறிவு இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு விளக்கமாக இந்த இடுகையை தொடர இயலவில்லை.   துறையை சார்ந்தவர்கள் இந்த வசதியை உபயோகித்து பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். 


(வேதியல் துறையை சாராதவர்களும் ஓட்டுப் போடலாம்.)


. 

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)