Tuesday, 30 March, 2010

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது. 

உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல்  இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம். 

 My Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு 
\Windows\System32\Drivers\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள். 
அந்த கோப்பின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 www.youtube.com எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 www.sitename.com (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும். 

   
கணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதும். இனி அந்த குறிப்பிட்ட தளங்கள் உங்கள் கணினியில் திறக்காது. 


20 comments:

கிரி said...

பசங்க எல்லாம் இப்ப ஜகஜால கில்லாடிகளா இருக்காங்க! இதற்கும் வேற ஐடியா வைத்து இருப்பாங்க :-)) நல்ல டிப்ஸ் சிலருக்கு பயனளிக்கலாம்.

உங்கள் புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு...கண்ணை உறுத்தாமல்

Mrs.Menagasathia said...

very useful!!

cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி சூர்யா

பயன்படுத்துகிறேன்

நல்வாழ்த்துகள் சூர்யா

mohamed said...

Very nice..

சைவகொத்துப்பரோட்டா said...

மீண்டும் அவற்றை திறக்க
வேண்டுமானால் என்ன
செய்ய வேண்டும் என்பதை
நேரம் கிடைக்கும் போது எழுதுங்களேன்.
நன்றி.

வரதராஜலு .பூ said...

ரத்தின சுருக்கமாக பெரிய விஷயத்தை கூறி விட்டீர்கள். அருமை.

பகிர்வுக்கு நன்றி

kavitha said...

உபயோகமான பதிவு

பகிர்வுக்கு நன்றி

சூர்யா ௧ண்ணன் said...

//பசங்க எல்லாம் இப்ப ஜகஜால கில்லாடிகளா இருக்காங்க! இதற்கும் வேற ஐடியா வைத்து இருப்பாங்க :-)) நல்ல டிப்ஸ் சிலருக்கு பயனளிக்கலாம்.//

நீக சொன்னது சரிதான்!.. ஆனால் Administrator கணக்கில் சென்றால் மட்டுமே அந்த கோப்பை மறுபடி மாற்றியமைக்க முடியும்..

சூர்யா ௧ண்ணன் said...

// Mrs.Menagasathia said...

very useful!!//

நன்றி மேனகா!

சூர்யா ௧ண்ணன் said...

//cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி சூர்யா

பயன்படுத்துகிறேன்

நல்வாழ்த்துகள் சூர்யா//

நன்றிங்க சீனா

சூர்யா ௧ண்ணன் said...

// mohamed said...

Very nice..//

நன்றி முஹமது

சூர்யா ௧ண்ணன் said...

//வரதராஜலு .பூ said...

ரத்தின சுருக்கமாக பெரிய விஷயத்தை கூறி விட்டீர்கள். அருமை. //

நன்றிங்க வரதராஜலு

சூர்யா ௧ண்ணன் said...

//kavitha said...

உபயோகமான பதிவு

பகிர்வுக்கு நன்றி
//

நன்றிங்க கவிதா!

சிவாஜி said...

wow... great idea! Thanks for sharing friend.

சசிகுமார் said...

அடப்பாவிங்களா அதுக்குள்ள சுட்டுடாங்களே. காலையில் ஆரம்பித்து இந்த பதிவை எழுதி முடிக்கவே சுமார் நான்கு மணிநேரம் ஆனது. என்னுடைய அலுவலக வேலைகளை ஒதுக்கி கஷ்ட்டப்பட்டு எழுதிய பதிவை நான் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் திருடி விட்டார்கள் மிகுந்த கவலையாக உள்ளது நண்பர்களே என்னோட லிங்க்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post.html
திருடப்பட்ட லிங்க்
http://idimulhakkam.blogspot.com/2010/04/blogger.html

ananth.s said...

வணக்கம் அண்ணா ரொம்ப பயனுள்ள செய்தி இத திரும்ப திறப்பது எப்படி என்றும் எழுதுங்களேன் ப்ளீஸ் நன்றி

ananth.s said...

வணக்கம் அண்ணா ரொம்ப பயனுள்ள செய்தி இத திரும்ப திறப்பது எப்படி என்றும் எழுதுங்களேன் ப்ளீஸ் நன்றி

BALAJI said...

குறிபிட்ட முகவரிகளை மட்டும் அனுமதிக்கும் படி செய்திட ஒரு வழி சொல்லுங்கள்.அலுவலகத்தில் நான் இதை virus scaner மூலம் செய்துள்ளேன்.சில சமயம் அது நன்றாக வேலை செய்வது இல்லை.

mk said...

you can access the blocked sites if you google the required site and click the google's search result

நான் தான் சதா! said...

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்!

கேட்டுத் தொலை'ன்றீங்களா! சரி, இத administrator account-ல, (அதாவது built in administrator) மட்டும் தான் பண்ண முடியுங்களா, இல்ல administrative accounts எதுல வேணாலும் பண்ணலாம்களா?

ஏனா, administrative accounts-ல கூட பண்ணலாம்னு நெனைக்றேங்க!

முன் நன்றிகள்!

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)