Monday, 30 November, 2009

ஆன்லைனில் எளிதாக அனிமேட்டட் வீடியோவை உருவாக்க

நீங்களே சொந்தமாக அனிமேட்டட் வீடியோவை உருவாக்க வேண்டுமா?

MeMoov என்பது ஒரு இலவச ஆன்லைன் அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும். இதை உபயோகித்து அனிமேட்டட் வீடியோவை உருவாக்க பெரிய தொழி நுட்ப அறிவு தேவையில்லை. இதில் தரப்பட்டுள்ள சீன், மனிதர்கள், முகபாவனைகள், உருவங்கள் ஆகியவற்றை நாம் நடக்க வைப்பது, நம்முடைய சொந்த குரலை உபயோகித்து பேச வைப்பது என சிறிய வீடியோவை எளிதாக உருவாக்கலாம்.

சுட்டி கீழே தரப்பட்டுள்ளது.
.

Friday, 27 November, 2009

விண்டோஸ் விஸ்டாவில் செக்யூரிட்டி சென்டர் அறிவிப்பை நீக்க


விண்டோஸ் விஸ்டாவில் நாம் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, டாஸ்க் பாரில் இடையிடையே  “Check your computer security” அல்லது  “Check your Firewall status”  போன்ற செக்யூரிட்டி சென்டர் பாப்அப்  அறிவிப்புகள்  வரும். இந்த அறிவிப்புகள் சில சமயங்களில் எரிச்சலூட்டுவதாக சிலருக்கு தோன்றலாம்.


 இந்த செக்யூரிட்டி சென்டர் பாப்அப்  நோட்டிபிகேஷன்களை நீக்க என்ன செய்வது எனப் பார்க்கலாம்.

டாஸ்க்பாரில் வலதுபுறமுள்ள சிவப்பு கேடயம் படமுள்ள ஐகானை வலது கிளிக் செய்து வரும் மெனுவில் Open Security Center என்பதை கிளிக் செய்யவும். (ஸ்டார்ட் மெனுவில் சென்றும் செக்யூரிட்டி சென்டர் ஐ திறக்கலாம்)


இனி திறக்கும் விண்டோவில்  இடது பேனில் “Change the way Security Center alerts me” என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

இப்பொழுது திறக்கும் டயலாக் பாக்ஸில் உள்ள மூன்று தேர்வுகள் தரப்பட்டுள்ளன, இதில் இறுதியாக உள்ளதை தேர்வு செய்யவும்.


அவ்வளவுதான்.
இதேபோல செக்யூரிட்டி சென்டர் அறிவிப்பை விண்டோஸ் எக்ஸ்பியில் எப்படி நீக்குவது என்பதை கீழே உள்ள எனது மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

விண்டோசில் Automatic Update மற்றும் Security Centre ஐ நீக்க ..,

 

 

.


விண்டோஸ் ஏழில் பயனர் கணக்கு


இதுவரை விண்டோஸ் எக்ஸ்பி உபயோகித்துக் கொண்டிருந்துவிட்டு, புதிதாக விண்டோஸ் ஏழு  உபயோகிக்க ஆரம்பித்திருப்பவர்களுக்கு, இதில் புதிதாக பயனர் கணக்கை எருவாக்குவது எப்படி என்ற சிறு குழப்பம் உண்டாவது இயற்கை. அவர்களுக்கான பதிவு இது.

விண்டோஸ் ஏழில் புதிய பயனர் கணக்கை துவங்க, Control Panel ஐ திறந்து கொண்டு,
User Accounts and Family Safety என்ற லிங்கில்  கிளிக் செய்து  Add or remove user account செல்லவும்.

இதில் கீழே உள்ள Create a New Account லிங்க்கை கிளிக் செய்து, பின் திறக்கும் டயலாக் பாக்ஸில் விரும்பும் பயனர் பெயரை கொடுக்கவும். உங்களைத் தவிர வேறு எவருக்கேனும் கணக்கு உருவாக்குவதாக இருந்தால், இங்கு Account Type என்பதில் Standard User என்பதை தேர்வு செய்வது நல்லது.  இப்படி Standard User வகையில் உருவாக்கப்படும் பயனர் கணினியில் உள்ள System Settings ஐ மாற்றவோ, மற்ற பயனர்களின் முக்கியமான கோப்புகளை நீக்கவோ, Security settings ஐ மாற்றவோ இயலாது.

எனவே Standard User ஐ தேர்வு செய்து Create Account பொத்தானை அழுத்தவும். பிறகு கணினியை ரீ ஸ்டார்ட் செய்தால் புதிய பயனர் பெயரை காண்பிக்கும், தேவைப்பட்டால் இதே முறையில் சென்று Change Account இல் கடவு சொல் கொடுக்கலாம்.
இது போன்ற Standard User வகை பயனர் system settings ஐ மாற்ற முயற்சிக்கும் பொழுது Administrator கடவுச்  சொல்லை கேட்கும்.

ஒரு Administrator ஆக நீங்கள் கணினியில் புதிதாக ஒரு மென் பொருளை நிறுவும்பொழுது , அந்த மென்பொருளை மற்ற பயனர்கள் உபயோகிப்பதற்கான அனுமதியை தரவேண்டும் என்பது ஒரு நல்ல விஷயம்.
.

வலைப்பக்கங்களில் தேவையானதை மட்டும் பிரிண்ட் செய்ய எளிய வழிநெருப்புநரி உலவியில் நாம் வலைப்பக்கங்களை மேய்வது கொண்டிருக்கும் வேளையில், நமக்கு தேவையான விபரங்கள் அடங்கிய வலைப்பக்கத்தில், தேவையற்ற விளம்பரங்கள், விஜிட்கள், டைட்டில்கள், பின்னூட்டங்கள் இவற்றை எல்லாம் தவிர்த்து, நாம் விரும்பும் விவரத்தை மட்டும் பிரிண்ட் செய்ய வேண்டுமெனில், அவற்றை காப்பி செய்து, பின் எடிட் செய்து, பிறகு பிரின்ட் செய்ய வேண்டும்.

இந்த பணியை சுலபமாக்க இதோ உங்களுக்காக ஒரு எளிய புக்மார்க்லேட் PrintWhatYouLike. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.

இந்த நீட்சியை நிறுவியபிறகு, இதற்கான டூல் பார் பட்டனை, உங்கள் உலவியில், உள்ள டூல் பாரில்  உங்களுக்கு வசதியான  இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.


 இதற்கு View மெனுவில் Toolbar சென்று Customise கிளிக் செய்தால் மேலே உள்ளதுபோல் டயலாக் பாக்ஸ் வரும், இதில் PrintWhatYouLike என்ற பட்டனை ட்ராக் செய்து உங்கள் டூல்பாரில் தேவையான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இனி எந்த வலைப்பக்கத்தில் பிரிண்ட் செய்ய வேண்டுமோ அந்த பக்கத்தில் இந்த பட்டனை அழுத்தினால் போதும்.உங்கள் உலவியின் சைட் பாரில், அனைத்து கட்டளைகளுடன், நீட்சி திறந்து விடும், இனி உங்கள் வலைப்பக்கத்தில் எந்த பகுதியெல்லாம் தேவையில்லையோ அவற்றை தேர்வு செய்து (மஞ்சள் நிறத்தில் காணப்படும்) டெலிட் செய்து விட்டு, பிரிண்ட் செய்யலாம். இதில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றையும் முயற்சித்துப்ப் பாருங்கள்.


 இதில் Auto Format -ல் உள்ள Do it For me என்ற பொத்தானை அழுத்தினால் அதுவாகவே ஓரளவிற்கு, நமக்கு தேவையற்ற விளம்பரங்கள், படங்கள் ஆகியவற்றை நீக்கிவிடும்.
.

Thursday, 26 November, 2009

மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்

OpenOffice என்பது Microsoft Offiice க்கு சரியானதொரு மாற்று கட்டற்ற இலவச மென்பொருள் ஆகும். இது Linux, Windows மற்றும் Mac இயங்குதளங்களில் இயங்கும்படியாக வெவ்வேறு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு உபுண்டு அல்லது வேறு லினக்ஸ் தளங்களுக்கு மாறும் உத்தேசம் இருந்தால், இதை பயன்படுத்தி பழகிக்கொள்ளுங்கள். பயன்படுத்துவதில் பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதனால் எளிதாக பழகிக்கொள்ளலாம்.


மைக்ரோசாப்ட்  ஆபீசின் முக்கிய வசதிகளான Word, Excel,Access, Publisher மற்றும் PowerPoint ஆகியவற்றிற்கு ஈடான வசதிகள் இதில் உள்ளன. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.

இதை கணினியில் பதிந்து கொள்வதும் எம்.எஸ் ஆபீஸ் போலத்தான்..,

இதிலுள்ள OpenOffice.Org Writer என்பது மைரோசாப்ட் வேர்டுக்கு ஈடானது.,

OpenOffice.Org Calc என்பது மைரோசாப்ட் Excel க்கு மாற்று மென்பொருள்..


OpenOffice.Org Impress என்பது மைரோசாப்ட் PowerPoint இற்கு மாற்று,


OpenOffice.Org Draw என்பது MS Publisher க்கு மாற்றான, மற்ற DTP மென்பொருட்களில் உள்ள சில வசதிகளும் உள்ளடக்கிய ஒரு வெக்டார் கிராபிக்ஸ் எடிட்டராகும்.


இதில் ஆபீஸ் 2007 இல் உள்ள ரிப்பன் மெனு மட்டும்தான் மிஸ்ஸிங்..,


இதைப் போன்ற வசதிகளுடன் IBM Lotus Symphony என்ற மென்பொருளும் இலவசமாக கிடைக்கிறது..

Wednesday, 25 November, 2009

நெருப்புநரி உலவியில் ஜிமெயிலை உங்கள் நிரந்தர மெயில் அப்ளிகேஷனாக மாற்ற
நாம் நெருப்புநரி(!?#$%^&*)  உலவியில் வலைப்பக்கங்களில் mailto லிங்கை கிளிக் செய்யும்  பொழுது, தானாகவே 'அவுட்லுக்' திறந்து கொள்ளும். ஒருவேளை நீங்கள் அவுட்லுக் உபயோகிப்பதில்லை என வைத்துக் கொண்டால், இந்த mailto லிங்கை கிளிக் செய்தவுடன் Gmail அல்லது Yahoo mail க்கு தானாக செல்ல வேண்டுமெனில், என்ன செய்யலாம்?

நெருப்புநரி  உலவியில் Tools மெனுவிற்கு சென்று Options ஐ கிளிக் செய்யுங்கள். இதில் Applications tab இற்கு சென்று,


அங்குள்ள சர்ச் டெக்ஸ்ட் பாக்ஸில் mail என டைப் செய்து என்டர் கொடுங்கள். இங்கு mailto என்பதற்கு நேராக உள்ள Drop down box இல் உங்களுக்கு தேவையான Gmail அல்லது Yahoo mail வெப் மெயில் அப்ளிகேஷனை தேர்வு செய்து, OK கொடுங்கள். அவ்வளவுதான்..

Monday, 23 November, 2009

திரையில் படம் போடுங்க.. படம் பிடிங்க...

கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள் PicPick.

  இதில் பலவிதமான Screen Capture மற்றும் Image Editing வசதி தரப்பட்டுள்ளது. இந்த மென்பொருளுக்கு இன்ஸ்டாலேஷன் தேவையில்லை என்பதால் நமது பென் ட்ரைவில் எடுத்துச் செல்லலாம். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.இதனை பதிவிறக்கி ரன் செய்தவுடன் ஒரு சிறு ஐகானாக உங்கள் டாஸ்க் பாரில் அமர்ந்துகொள்ளும். இந்த ஐகானை வலது கிளிக் செய்வதன் மூலமாக இதன் பல வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Screen Capture:-
வழக்கமாக நாம் திரையில் உள்ளதை Screen Capture செய்ய கீ போர்டில் உள்ள Print Screen ஐ உபயோகித்து பிறகு ஏதாவது Image Editor மென்பொருளில் பேஸ்ட் செய்து அதில் நமக்கு தேவையான பகுதியை பிரித்தெடுப்போம்.

இந்த மென்பொருளில் இதற்காக பல வசதிகள் தரப்பட்டுள்ளன.
Full Screen
Active Window
Window Control
Region
Fixed Region
FreeHand Capture


இவற்றில் Window Control வசதியில், ஒரு திரையில் கொள்ளாத விவரங்களை (ஒரு பக்கத்திற்கு மேலான வேர்டு டாக்குமென்ட், வலைப்பக்கம்) பிரதி எடுக்கலாம், மேலும் Region, Freehand போன்ற வசதிகள் மிகவும் பயனுள்ளவை.


இப்படி எடுக்கப்படும் பிரதிகளை கிளிப் போர்டுக்கோ, PicPick editor க்கோ அல்லது தனி கோப்பாகவோ சேமிக்க முடியும்.

மேலும் இதில் உள்ள கலர் பிக்கர் எனும் வசதியை உபயோகித்து திரையில் உள்ள நமக்கு தேவையான நிறத்தை எடுத்து தேவையான படங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள வொயிட் போர்டு வசதியில் உங்கள் திரையை ஒரு வரை பலகையாக்கி தேவையானதை வரைந்து கொள்ளலாம் (பவர்பாயின்ட் பிரசண்டேஷனுக்கு).

இதில் உள்ள க்ராஸ் ஹேர் எனும் வசதி வலை வடிவமைப்பவர்களுக்கு மிகவும் உபயோகமானதாகும், இதன் மூலம் திரையில் குறிப்பிட்ட co-ordinate களை கண்டறிய, ஒரு பகுதியின் சரியான பிக்சல் அளவுகள் தெரிந்து கொள்ளலாம்.

இனியென்ன  உங்கள் திரையில் படம் போடுங்க.. படம் பிடிங்க...
.Saturday, 21 November, 2009

மிகவும் பயனுள்ள ஒரு வலைத்தளம்


time and date.com    என்ற வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தளத்தில் World Time, Calendar Creator, Count down, Weather,  date  & time calculation மற்றும் மேலும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.இந்த தளத்தில் சர்ச் பாக்ஸில்  நமக்கு தேவையான  நகரத்தின் பெயரை கொடுத்து தேடினால், அதைப்பற்றிய விவரங்கள், வானிலை தகவல்கள் உடனே கிடைக்கின்றன.இந்த தளத்தில் நமது நாட்டிற்கு ஏற்ப, நமது தேவைக்கேற்ப  நாள்காட்டியை உருவாக்க முடியும், இதில் குறிப்பிட்ட நாட்டிற்கு ஏற்றவாறு விடுமுறை தினங்கள் குறிக்கப்பட்டிருப்பது இதனுடைய தனிச் சிறப்பு.
இதில் Time zone converter மிகவும் பயனுள்ளதாக உள்ளது..,

உபயோகித்து பாருங்களேன்.

வலைத்தள முகவரி http://www.timeanddate.com. 

Friday, 20 November, 2009

விண்டோஸ், உபுண்டு இயங்குதளங்களில் விண்டோசை முதன்மைபடுத்த

நாம் நமது கணினியில் விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகிய இயங்குதளங்களை வெவ்வேறு பார்ட்டீஷன்களில் பதிந்திருந்தால், கணினியை துவக்கியவுடன் வரும் க்ரப்  பூட் மெனுவில் உபுண்டு default  ஆக இருக்கும். ஒருவேளை நாம் விண்டோசில் பணிபுரியலாம் எனக்கருதி கணினியை துவக்கி, சிறிது கவனக் குறைவாக இருந்தாலும், உபுண்டு பூட் ஆகிவிடும்.
க்ரப் பூட் லோடரில் விண்டோஸ் இயங்குதளத்தை default ஆக மாற்ற என்ன செய்யலாம்?

உங்கள் கணினியை உபுண்டுவில் பூட் செய்து கொண்டு, டெர்மினல் திரைக்குச் சென்று கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
sudo gedit /boot/grub/menu.lst
 (gedit என்பது உபுண்டுவில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டராகும்) இனி திறக்கும் கோப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்லவும்.

## default num
# Set the default entry to the entry number NUM. Numbering starts from 0, and
# the entry number 0 is the default if the command is not used.
#
# You can specify ’saved’ instead of a number. In this case, the default entry
# is the entry saved with the command ’savedefault’.
# WARNING: If you are using dmraid do not change this entry to ’saved’ or your
# array will desync and will not let you boot your system.
default 0

 இதில் இறுதியாக உள்ள default 0 என்பதுதான், முக்கியமான பகுதியாகும். இந்த 0 (Zero) வுக்கு  பதிலாக பூட்  மெனுவில்  விண்டோஸ் இருக்கும் வரிசை எண்ணை கொடுக்கவும், (வழக்கமாக 0 விற்கு பதிலாக 4  என மாற்றலாம்.) கோப்பை சேமித்துவிட்டு கணினியை மறுபடி துவக்கவும்.

Thursday, 19 November, 2009

உபுண்டுவில் விண்டோஸ் கீயை ஸ்டார்ட் மெனுவாக மாற்ற

உபுண்டுவில் உள்ள ட்ராப் டவுன் மெனுவும், விண்டோசில் உள்ள ஸ்டார்ட் மெனுவும் ஏறக்குறைய ஒன்று போலத்தான். ஆனால் விண்டோசில், கீபோர்டில் உள்ள விண்டோஸ் கீயை அழுத்தினால் ஸ்டார்ட் மெனு திறக்கும், அதேபோல உபுண்டு லினக்ஸ் இல் விண்டோஸ் கீயை அபிளிகேஷன் மெனுவை திறக்க எப்படி ஷார்ட் கட் உருவாக்குவது என்று பார்ப்போம்.
உபுண்டுவில் System மெனுவிற்கு சென்று  Preferences \ Keyboard Shortcuts என்ற பகுதிக்கு செல்லுங்கள். இதில் ஸ்க்ரோல் செய்து “Show the panel menu” என்பதை கிளிக் செய்து , Shortcut என்பதில் கிளிக் செய்தவுடன்  “New accelerator…” என்ற செய்தி வரும்பொழுது Windows Key ஐ அழுத்தவும். பிறகு close button ஐ கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.  

உபுண்டு 9.10 இலவச தரவிறக்கச் சுட்டி இந்த வலைப்பக்கத்தின் வலதுபுறம் உள்ளது...
.

வலைப்பக்கத்திற்கான ஃப்ளாஷ் கோப்புகளை எளிதாக உருவாக்க

நீங்கள் விரும்பும் படங்களை கொண்டு, உங்களது வலைப்பக்கத்தில் உபயோகிப்பதற்கான ஃப்ளாஷ் கோப்புகளை எப்படி உருவாக்குவது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்தப் பணிக்கான ஒரு மென்பொருள் Photo Flash Maker. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.


இதனை கணினியில் பதிவது மிகவும் எளிது. முதலில் இந்த மென்பொருளை துவக்கும் பொழுது, முதலில் வரும் திரையில், Slideshow Wizard ஐ தவிர்க்க, கீழ் இடது புறமுள்ள Don't show this wizard dialog next time என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள் (தேவைப்பட்டால்..)

  இதில் ஃப்ளாஷ் கோப்புகளை விசார்டை உபயோகித்து அல்லது இதில் உள்ள PHOTO, THEME, PUBLISH என்ற மூன்று படிநிலைகளை உபயோகித்து உருவாக்கலாம்.

இங்கு ஃபோட்டோ என்ற படி நிலையில் நமக்கு தேவையான படங்களை சேர்த்துக்கொள்ளலாம். அனைத்து படங்களையும் சேர்த்த பிறகு, இரண்டாம் படி நிலையான THEME இற்கு சென்று,

நீங்கள் விரும்பும் தீமை தேர்வு செய்து கொண்டு, PUBLISH டேபில் நீங்கள் உருவாக்கிய ஃப்ளாஷ் கோப்பிற்கான SWF மற்றும் HTML கோப்பு வகைக்கான பெயரை கொடுத்து Publish Now என்ற பொத்தானை அழுத்தவும்.

இணையத்தில் பதிவேற்றி பகிர்வதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.

 மேலும் இந்த மென்பொருளில் இசையை சேர்ப்பது போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன..


.

Tuesday, 17 November, 2009

நெருப்புநரியில் காப்பி செய்வதற்கான ஒரு எளிய நீட்சி


நாம் இணையத்தில் சில விக்கிபீடியா போன்ற தளங்களிலிருந்து, நமக்கு தேவைப்படும் ப்ராஜெக்டிற்காகவோ, அல்லது வேறு ஏதாவது உபயோகத்திற்காகவோ,  டெக்ஸ்டை காப்பி செய்து வேர்டு போன்ற எடிட்டரில் பேஸ்ட் செய்யும் பொழுது, ஐபர் லிங்க், இமேஜ், டெக்ஸ்ட் பாக்ஸ், டேபிள் போன்றவைகள் Text Format செய்யும் பொழுது பெரும் இடைஞ்சலாக இருக்கும். உதாரணமாக கீழே உள்ள படங்களை பாருங்கள்.


இப்படி காப்பி செய்த டெக்ஸ்டை வேர்டில் பேஸ்ட் செய்யும் பொழுது,


இப்படி வரும் இதை ஃபார்மேட்  செய்வதற்குள் பெரும் பாடாக இருக்கும். அல்லது இதை நோட்பேடில் முதலில் காப்பி செய்து பிறகு வேர்டுக்கு எடுக்க வேண்டும்.

இந்த பணியை மிகவும் எளிதாக்க நெருப்பு நரியின் Copy Plain Text என்ற நீட்சியை இறுதியில் உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளூங்கள். (அதற்கு முன்பாக ஓட்டு போடுங்கள்.. ஹி ஹி )

Copy Plain text என்ற நீட்சியை நிறுவிய பிறகு, மேலே குறிப்பிட்ட பணி எவ்வளவு எளிதாகிறது என்று பாருங்கள்.


இப்படி டெக்ஸ்டை தேர்வு செய்து வலது கிளிக் செய்து, Context மெனுவில் Copy as Plain Text என்பதை கிளிக் செய்து, வேர்டில் பேஸ்ட் செய்தால்..,இது மட்டுமல்லாமல், இதனுடைய Options சென்றால், மேலும் சில வசதிகள் தரப்பட்டுள்ளன.


இந்த நீட்சி அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
.

Monday, 16 November, 2009

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய


நம்மில் பலர் மைக்ரோசாப்ட் Office 2003 -ல் வேலை செய்து பழக்கப்பட்டவர்கள். திடீரென Office  2007  உபயோகிக்க துவங்கும் நிலை வரும்பொழுது, அதில் டூல்பாருக்கு பதிலாக உள்ள ரிப்பன் மெனுவை பார்த்து, சற்று திணறி, சில கட்டளைகளை தேடி சலித்துப்போய், மறுபடியும் 2003 இற்கே மாறி விட்டிருக்கிறோம்.

இதற்கு முக்கியமான காரணம் நாம் உபயோகிக்கப் போகும் கட்டளை எந்த ரிப்பன் மெனுவிற்கு உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது என்ற குழப்பமே ஆகும்.

நாம் ஒரு கணினி தொழில்நுட்ப வல்லுனராக இல்லாமலிருந்தாலும், புதிதாக வருகின்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டும் உபயோகப்படுத்தவும் வேண்டுமாய்தான் இருக்கிறோம்.

இதோ உங்களுக்காக, Office 2007 -ல்  நீங்கள் தேடும் கட்டளைகளை எந்த ரிப்பனில் உள்ளது எனத் தேடித்தர, Microsoft Office Labs -இன் புதிய Add-in.

தரவிறக்க சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதை பதிந்து கொள்வது மிகவும் எளிதானது. பதிந்து கொண்டவுடன். Excel அல்லது Word என ஏதாவது ஒரு அப்பிளிகேஷனை திறந்தால் அதில் வழக்கமாக உள்ள ரிப்பனுக்கு அருகாமையில் Search என்ற புதிய tab வந்திருப்பதை பார்க்கலாம்.இந்த சர்ச் பாக்ஸில் நமக்கு தேவையான கட்டளைகளை டைப் செய்தால் போதுமானது.


சரியாக கட்டளைகளையே டைப் செய்ய வேண்டுமென்றில்லை, உதாரணமாக Font size பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ, சர்ச் பாரில் smaller என டைப் செய்தால் போதும். அதுமட்டுமல்லாமல், நாம் டைப் செய்ததில் ஏதாவது எழுத்துப் பிழை இருந்தாலும், அதுவே மாற்று வார்த்தையை தரும் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.


 

அது மட்டுமல்லாமல் Office 2007 -ல் உருவாக்கிய Docx, xlsx போன்ற கோப்புகளை 2003 -ல் திறக்க முடியவில்லை என்ற கவலை இருந்தால், கீழே உள்ள சுட்டியிலிருந்து File Format Converter ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
.

Saturday, 14 November, 2009

குழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்

அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே  47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள்  வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.

கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான்   சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.

அவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக  குழந்தைகள்தினத்தில் வழங்கி மகிழ் செய்யுங்கள்.

தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது.

இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.

முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது.  Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.


இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை  அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.


இதேபோல ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்.


இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


இனி உங்கள் குழந்தைகளின் உற்ச்சாகத்தைப் பாருங்கள்.
குழந்தைகளுக்கு எனது இனிய 
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!


.

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)