Thursday, 22 October, 2009

வயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி?

துபாயிலிருந்து பதினைந்து நாட்கள் விடுமுறையில் வந்திருந்த ஒரு வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'அங்க என்ன Internet Connection வச்சுரிக்கிங்க' என கேட்க, அவர்  சொன்னார், 'எதுவுமில்லைங்க, லேப்டாப்பை எடுத்துட்டு போறம், ஏறக்குறைய எல்லா இடங்களிலும், யாராவது ஒருவர் இணையத்தில் வேலை செய்து கொண்டிருப்பார்கள், அதில் நான் WiFi மூலமாக கனெக்ட் செய்து கொள்வேன்' என்றார்.

யோசித்து பார்த்த பொழுது, இப்படி நாமும் ஒரு வயர்லெஸ் இணைய கணக்கு வைத்திருக்கிறோமே, நம்முடைய கணக்கில், பக்கத்து அறையிலோ, பக்கத்து வீட்டிலோ, யாரும் நுழைய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

இப்பொழுத்தான், எல்லா மடிகணினிகளிலும், WiFi இருக்கிறது, நம்முடைய ரூட்டர்/ மோடம்  இணையத்தில் தொடர்பில் இருக்கும் பொழுது,  லேப்டாப்பை  ஆன் செய்தாலே  போதுமானது.

இப்படி நமது இணைய கணக்கில் நம்மைத் தவிர வேறு யாரும் நுழையாதவாறு, பாதுகாப்பது எப்படி?

இங்கே நான் விவரித்திருப்பது 'Linksys WRT54GS' ரூட்டரில் இதை எப்படி செய்வது எனபது குறித்து. உங்களுடைய மோடம் / ரூட்டர் க்கு தகுந்தாற்போல ஒரு சில ஆப்ஷன்கள் மாறலாம்.

முதலில் உங்கள் ரூட்டருக்கு கடவு சொல்லை அவ்வப்பொழுது மாற்றுங்கள்.

இதற்கு, ரூட்டரில் லாகின் ஆக வேண்டும்.

உங்கள் உலவியை திறந்து கொண்டு, அதன் அட்ரஸ் பாரில் 192.168.1.1 என்ற ஐபி  அட்ரசை டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இப்பொழுது வரும் லாகின் திரையில் உங்கள் பயனர் பெயரும், கடவு சொல்லும் கொடுங்கள். (இணைய கணக்கின் பயனர்/கடவுசொல் அல்ல. ரூட்டருடையது வழக்கமாக பல ரூட்டர்களின் default பயனர் பெயர் admin கடவு சொல்லும் admin என்பதாகவே இருக்கும்.


பிறகு Administration -> Management சென்று Router Password  மற்றும் Re-enter to confirm field களில் கடவு சொல்லை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்.

இனி அடுத்த பகுதிக்கு செல்வோம்.

ஒவ்வொரு Ethernet Adapter க்கும், அதற்கான 12 இலக்க Unique Identifier உண்டு. இதனை MAC Address என அழைக்கிறோம். (MAC - Media Access Control) இதனை அடிப்படையாக கொண்டுதான் அனைத்து நெட்வொர்க் களும் ஒரு குறிப்பிட்ட கணினியை நெட்வொர்க்கில் அனுமதிக்கலாமா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறது.

நமது கணினிக்கான MAC Address ஐ கண்டறிய,

Start > Run.  சென்று cmd  என டைப் செய்து என்டர் கொடுங்கள். இனி திறக்கும் command prompt இல் ipconfig /all. என டைப் செய்து என்டர் கொடுங்கள். பிறகு திரையில் Ethernet Adapter Wireless Network Connection. என்ற பகுதியில் மூன்றாவதாக Physical Address. என்பதற்கு நேராக இருக்கும் MAC அட்ரசை குறித்துக்கொள்ளுங்கள். (உதாரணமாக 00-A0-C9-14-C8-29)

இனி உங்கள் ரூட்டர் மெனுவில்   Wireless > MAC Address > Wireless Mac Filter. சென்று  Enable என்பதை கிளிக் செய்து Permit only PCs listed to access the wireless network option, மற்றும் Edit MAC Filter என்ற  List button ஐ கிளிக் செய்து, நீங்கள் குறித்து வைத்துள்ள MAC Address ஐ டைப் செய்யுங்கள். பிறகு சேமித்துக் கொள்ளுங்கள்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் எந்த எந்த கணினிகளின் MAC address களை கொடுக்கிறீர்களோ, அந்த கணினிகளை தவிர வேறு கணினிகள் மூலமாக வயர்லெஸ் தொடர்பை உருவாக்க முடியாது.


suryakannan.blogspot.com எனது இந்த வலைப்பக்கத்தின் நூறாவது பதிவு. 
மார்ச் 2009 இல் துவங்கிய இந்த வலைப்பக்கம் இன்று 64926 பார்வையாளர்களுடனும், Alexa Ranking இல் 329081 ம் பெற்று வளர்ந்ததற்கு காரணமாக இருந்த தமிலிஷ். யூத்ஃபுல் விகடன், தட்ஸ்தமிழ், தமிழ்வெளி, திரட்டி, தமிழ்10, உலவு, நம்குரல், தமிழர்ஸ்  போன்ற தளங்களுக்கும், 
என்னை ஊக்குவித்த அனைத்து சக பதிவர்களுக்கும்,  எனது பல பதிவுகளை வெளியிட்ட தமிழ் கம்ப்யூட்டர்  பத்திரிகை  மற்றும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.   

25 comments:

நித்தியானந்தம் said...

Nice one Mr.surya.....wow for your 100 th post......expecting for 1000 th post.......thanks for sharing...all the best.....

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. நித்தியானந்தம்!உங்கள் ஆதரவுக்கு நன்றி!

நித்தியானந்தம் said...

பயனுள்ள தகவல் திரு.சூர்யா, பொதுவாக "wi-fi" ஐ ஆதரிக்கும் ரூட்டர்கள் "WEP,WPA" போன்ற "encryption" களை உள்ளடக்கியேதானே இருக்கின்றது. மேலும் உங்களது "wifi network" இல் யாராவது நுழைய விரும்பினால் உங்களது ரூட்டரின் "WEP,WPA key" ஐ (20 இலக்க "alpha numeric") எண்ணைக்கேட்குமே...http://www.pokemontrash.com/diamant-perle/images/wifi/livebox-01.jpgஅவ்வாறு இருக்கும்போது எப்படி ஒருவர் உங்களின் "wifi network" இல் இணையமுடியும்? 20 இலக்க "alpha numeric" எண்ணை 64 bits,128 bits"encryption" ஐ "hack" செய்வதும் கடினம். மேலும் எனக்கு இந்தியாவில் பயன்படுத்தும் ரூட்டர்களை பற்றிய விபரங்கள் தெரியவில்லை.... எனவே "Mac ID" ஐ வைத்துமட்டும் தான் "wifi network" ஐ "block" செய்யமுடியுமா என்பதுமட்டுமே எனக்கு உங்களிடமிருந்து தெரியவேண்டிய விடை....

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. நித்தியானந்தம்!. // பொதுவாக "wi-fi" ஐ ஆதரிக்கும் ரூட்டர்கள் "WEP,WPA" போன்ற "encryption" களை உள்ளடக்கியேதானே இருக்கின்றது. மேலும் உங்களது "wifi network" இல் யாராவது நுழைய விரும்பினால் உங்களது ரூட்டரின் "WEP,WPA key" ஐ (20 இலக்க "alpha numeric") எண்ணைக்கேட்குமே...http://www.pokemontrash.com/diamant-perle/images/wifi/livebox-01.jpgஅவ்வாறு இருக்கும்போது எப்படி ஒருவர் உங்களின் "wifi network" இல் இணையமுடியும்? 20 இலக்க "alpha numeric" எண்ணை 64 bits,128 bits"encryption" ஐ "hack" செய்வதும் கடினம்.// தங்கள் கருத்து உண்மைதான். ஆனால், வழக்கமாக முதல்முறையாக இன்டர்நெட் நிறுவும் பொழுது, PPPOE / Bridge mode ஆகியவற்றைத் தவிர வேறு எந்த default settings களையும் மாற்றுவதில்லை. (நான் சொல்வது பெரிய நிறுவனங்களை அல்ல, சராசரி பயனாளியை..) எனவே, அருகில் எந்த லேப்டாப்பை வைத்தும் கூட இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. இதற்கு நுணுக்கமான கணினி அறிவு தேவைப் படுவதில்லை. (இந்தியாவில் ADSL Modem/Router பெரும்பாலும் ISP களினாலேயே வழ்ங்கப்படுகிறது )Wep, WPA கீயை கொடுத்துதான் நெட்வொர்க்கில் இணைய முடியும் என்பதில்லை. (ஆனாலும் சில ரூட்டர்கள் விதிவிலக்கு) "Mac ID" ஐ வைத்துமட்டும் தான் "wifi network" ஐ "block" செய்ய நான் முற்சித்து பார்த்தேன். வேறு வழிகள் இருக்கலாம். முயற்சித்து பார்த்து, பிறகு தெரிவிக்கிறேன். அதோடு, இந்த முறையில் நமக்கு தேவைப்பட்ட கணினிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கும் வசதி இருப்பதால், இதுவே நல்ல தீர்வாக எனக்குபடுகிறது. உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

வானம்பாடிகள் said...

100வது இடுகைக்கு வாழ்த்துகள். அத்தனையும், மீள் பார்வைக்கான முத்துகள். ஏர்டெல் கனெக்‌ஷன்னா பிரச்சன இல்லை. சொல்லிட்டே போறாங்க. லேப்டாப் வாங்கினா சர்வீஸ் கால் பண்ணுங்கன்னு.:)

சூர்யா ௧ண்ணன் said...

திரு. நித்தியானந்தம்! Wireless Protected Access (WPA) மற்றும் Wired Equivalent Privacy (WEP). ஆகிய இரண்டில் WPA என்பது மிகவும் பாதுகாப்பானது. இதற்கு Wireless > Wireless Security. சென்று Pre-Shared Key என்பதை Security Mode லிஸ்டிலிருந்து தேர்வு செய்து, WPA Shared Key field ஐ கிளிக் செய்து கடவு சொல் கொடுக்கலாம்.

சூர்யா ௧ண்ணன் said...

மிக்க நன்றி தலைவா! இவை அனைத்தும் உங்களைப் போன்ற பதிவுலக நண்பர்களால் தான் சாத்தியமாயிற்று. BSNL இன்டர்நெட்டில் இந்த பிரச்சனை அதிகம் தலைவா!

Mrs.Menagasathia said...

பயனுள்ளதாக இருக்கு இந்த பதிவு.100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ப்ரதர்!!100 1000மாகட்டும் ...

சூர்யா ௧ண்ணன் said...

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி மேனகா! உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

தமிழ்நெஞ்சம் said...

வாழ்த்துகள் தலைவா. 100 பதிவும் பயனுள்ள பதிவுகளாக வழங்கிய உங்களைப் பாராட்டுகிறேன். உங்களுடைய லினக்ஸ் பற்றிய விளக்கங்கள் கருத்தைக் கவர்கின்றன. என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்,த.நெ.

சூர்யா ௧ண்ணன் said...

// தமிழ்நெஞ்சம் said... வாழ்த்துகள் தலைவா. 100 பதிவும் பயனுள்ள பதிவுகளாக வழங்கிய உங்களைப் பாராட்டுகிறேன். உங்களுடைய லினக்ஸ் பற்றிய விளக்கங்கள் கருத்தைக் கவர்கின்றன. //ரொம்ப நன்றி தலைவா! பதிவுலகத்தில் எனது மானசீக குருவே நீங்கள்தான். ஆரம்பத்தில் நீங்கள் கொடுத்த ஆலோசனைகளும், உற்சாகமும்தான் இன்றைக்கு எனது வலை பக்கம் நூறு பதிவுகளை கொண்டதற்கான காரணம். மிக்க நன்றி தலைவா!

கலகலப்ரியா said...

nooru.. aayiramaaga vaazhththukkal..! intha wireless samaacharam sonnathaala enakkuthaan nashtam.. last time chennai vanthappo.. yaro punniyaathmaa punniyathla.. daily net irunthichi.. ipdi pozhaippa kedukkureegale.. avvvvvvv.. =))

நித்தியானந்தம் said...

விளக்கத்திற்க்கு நன்றி திரு.சூர்யா...என்னுடைய "Router" இல் சாதாரணமாகவே "WPA enryption" இருக்கிறது..எனினும் நான் பாதுகாப்பு கருதி என்னுடைய "wireless network" ஐயே நான் "hide" செய்துவிடுவேன். எனவே பிற கணினியில் நீங்கள் "search wireless network" என தேடினாலும் என்னுடைய "SSID" யானது "search list" இல் தெரியாது.....தகவலுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி திரு.சூர்யா......

சூர்யா ௧ண்ணன் said...

ரொம்ப நன்றிங்க கலகலப்ரியா! //intha wireless samaacharam sonnathaala enakkuthaan nashtam.. last time chennai vanthappo.. yaro punniyaathmaa punniyathla.. daily net irunthichi.. ipdi pozhaippa kedukkureegale.. avvvvvvv.. =))//இது எத்தன நாளா நடக்குது?

தமிழ்மகன் said...

தொடரட்டும் உங்கள் சேவை.உங்கள் வலைபூ மேலும் வளர்ச்சி அடைய எனது மனமார்ந்த நன்றிகள்

சூர்யா ௧ண்ணன் said...

மிக்க நன்றி தமிழ்மகன்!

கலகலப்ரியா said...

//இது எத்தன நாளா நடக்குது?//aiyayo.. naan illa.. fbi range ku kelvi ellaam kekkapdaathu.. company secret.. =))

yavana rani said...

கணக்கில்லாத அளவிற்கு பதிவுகளைதொடரணும் திரு. சூர்யா அவர்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி யவன ராணி!

கிரி said...

நான் கடவுச்சொல் வைத்து தான் பயன்படுத்துகிறேன் 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சூர்யா கண்ணன்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி கிரி

DEARINDIANE said...

தங்களின் பதிவுகளைப் படித்து, நானும் ஒரு bloggerஐ துவக்க சிந்தனை எழுந்துள்ளது. எனக்கு கணிணி மற்றும் வலைபதிவும் புதியது. தங்களது நூறாவது பதிப்பு அருமை. தங்களின் பணி மென்மேலும் வலுப்பட எனது நல் வாழ்த்துக்கள் திரு.சூரியா.அன்புடன்,ஜிஆர்ஜி.புதுவை.

Jaleela said...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.அனைத்தும் கம்பியுட்டர் சம்பந்த பட்ட பயனுள்ள தகவல்.என் பிளாக்கில் வந்து போட்ட மெசேஜ் முயற்சி செய்கிறேன்.முடிய வில்லை என்றால் சொல்கீறேன்.

oli mohamed said...

Hello sir.ennudaya friend wifi use seiya ennudaya android mobil mac address avanidam kodutthen.intha mac address kondu ennudaya mobilil ulla photos & videos avar pakka mudiyuma

Unknown said...

super information sir, thanku so much...

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)