Friday 30 October 2009

புதிதாய் நிறுவிய மென்பொருட்கள் ஹைலைட் ஆவதை நீக்க

நாம் கணினியில் புதிதாய் நிறுவிய மென்பொருட்கள் விண்டோஸ் -ல் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும், இது நம்மில் சிலருக்கு  விரும்பப்படாததாக உள்ளது. இதை நீக்க என்ன செய்யலாம்.


விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் ஏழு:-

Start மெனுவில் வலது கிளிக் செய்து Properties செல்லுங்கள்.


இனி திறக்கும்  Taskbar and Start Menu Properties திரையில் Customize பட்டனை அழுத்துங்கள்.

Customize Start Menu திரையில் Highlight newly installed programs என்பதை Uncheck செய்து OK பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்.விண்டோஸ் எக்ஸ்பி :-

Start பட்டனை வலது கிளிக் செய்து Properties சென்று, Taskbar and Start menu Properties திரையில் Start Menu டேபில் Start Menu என்பதை தேர்வு செய்து, அருகில் உள்ள Customize என்ற பட்டனை அழுத்துங்கள்.


பிறகு வரும் திரையில் Advanced டேபை க்ளிக் செய்து, அதில் Highlight Newly Installed Programs என்பதை Uncheck செய்து OK கொடுங்கள்.


 
அவ்வளவுதான்..
Thursday 29 October 2009

வயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாக்க...

உங்கள்  BSNL வயர்லெஸ் இணைய கணக்கை மற்றவர்கள்  தவறாக உபயோகிக்காமல் பாதுகாக்க உங்கள் மோடம்/ரூட்டரில் செய்யவேண்டிய படிப்படியான செயல்பாடுகள்.
மேலே உள்ள ஸ்லைடு ஷோ தெளிவாக இல்லையெனில் கீழே உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


இது குறித்த எனது மற்றொரு பதிவை பார்க்க..,


வயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி?


.

Wednesday 28 October 2009

விண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட்அப் மென்பொருட்களை நீக்க ..,

விண்டோஸ் விஸ்டா உபயோகிப்பவர்கள், தங்களது கணினியில் வலது புறம் கீழ்  மூலையிலுள்ள சிஸ்டம் ட்ரேயில் தேவையில்லாத பல ஐகான்கள் இருப்பதை பார்த்திருக்கலாம். இவை அனைத்தும் விண்டோஸ் பூட் ஆகும் பொழுது ஸ்டார்ட்அப்  -ல் சேர்க்கப்பட்டுள்ள மென்பொருட்களாகும்.

இவற்றில் சில நமக்கு தேவையில்லாதவைகளாக இருந்தால், அவற்றை ஸ்டார்ட் அப்பில் இருந்து நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

Control Panel ஐ திறந்து கொண்டு, அதில் Search Box -இல் Startup என டைப் செய்து என்டர் கொடுங்கள். உடனடியாக “Stop a program from running at startup” என்ற லிங்குடன் காண்பிக்கும். நீங்கள் நேரடியாக Windows Defender ஐ திறந்தால், அதில் பல மெனுக்களுடன் போராட வேண்டியிருக்கும். இனி திறக்கும் Windows Defender திரையில் ஸ்டார்ட்அப் ப்ரோகிராம்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருக்கும்.
இந்த உபயோகமான வசதியை பயன்படுத்தி, ஒவ்வொரு ஸ்டார்ட் அப் மென் பொருட்களின் விவரங்களை அறிந்து கொள்வதுடன், தேவையில்லாதவற்றை நீக்குவது மற்றும் செயலிழக்கச் செய்வது போன்றவற்றை எளிதாக செய்யலாம்..


Monday 26 October 2009

நெருப்புநரி உலவியில் தமிழ்விசை நீட்சிதமிழ்விசை என்பது அஞ்சல், தமிழ்நெட்99, பாமினி, பழைய மற்றும் புதிய தட்டச்சு, இன்ஸ்கிரிப்ட் மற்றும் அவ்வை விசைப் பலகை வடிவமைப்புகளை உள்ளடக்கிய, தமிழ் பதிவர்களுக்கான மிகவும் உபயோகமான நெருப்புநரி நீட்சியாகும்.

இதை நிறுவுவதற்கு உங்கள் கணினியில் குறைந்தபட்சம் ஒரே ஓரு யுனிகோட் தமிழ் எழுத்துரு பதியப் பட்டிருக்கவேண்டும். வழக்கமாக 'லதா' எழுத்துரு விண்டோஸ் உடனே பதியப் பட்டிருக்கும்.

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி தமிழ்விசை நீட்சியை நெருப்புநரி உலவியில் பதிந்துகொண்டு, நெருப்புநரியை மறுபடியும் தொடங்குங்கள்.பிறகு,
வலைப்பக்கத்தில் எந்த டெக்ஸ்ட் ஃபீல்டில் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டுமோ, அங்கு கர்சரை வைத்து கீழ்கண்ட hot keys களை உபயோகப்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்.

Alt+F6 => Avvai
Alt+F7 => Inscript
Alt+F8 => Anjal
Alt+F9 => Tamil 99
Alt+F10 => Bamini
Alt+F11 => Old Typewriter
Alt+F12 => New Typewriter


மேற்கண்ட ஷார்ட்கட் கீகளை உபயோகிக்காமல், மெளசின் வலது கிளிக் context menu வை பயன்படுத்தியும் தமிழ் தட்டச்சு செய்யலாம்.

தமிழ்விசையிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கும் மாற்ற F9 கீயை உபயோகிக்கவும்.


.

Sunday 25 October 2009

விண்டோஸ் தளத்தில் இயங்க கூடிய போர்டபிள் உபுண்டு

Dual Boot -ல் விண்டோஸ் மற்றும் உபுண்டுவில் பணி செய்து, போரடிக்கிறதா ?

இதோ உங்களுக்காக விண்டோஸ் தளத்தில் விண்டோஸ் அப்ளிகேஷன் போலவே இயங்க கூடிய போர்டபிள்  உபுண்டு.கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து முயற்சித்து பாருங்கள்.


.

Thursday 22 October 2009

வயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி?

துபாயிலிருந்து பதினைந்து நாட்கள் விடுமுறையில் வந்திருந்த ஒரு வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'அங்க என்ன Internet Connection வச்சுரிக்கிங்க' என கேட்க, அவர்  சொன்னார், 'எதுவுமில்லைங்க, லேப்டாப்பை எடுத்துட்டு போறம், ஏறக்குறைய எல்லா இடங்களிலும், யாராவது ஒருவர் இணையத்தில் வேலை செய்து கொண்டிருப்பார்கள், அதில் நான் WiFi மூலமாக கனெக்ட் செய்து கொள்வேன்' என்றார்.

யோசித்து பார்த்த பொழுது, இப்படி நாமும் ஒரு வயர்லெஸ் இணைய கணக்கு வைத்திருக்கிறோமே, நம்முடைய கணக்கில், பக்கத்து அறையிலோ, பக்கத்து வீட்டிலோ, யாரும் நுழைய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

இப்பொழுத்தான், எல்லா மடிகணினிகளிலும், WiFi இருக்கிறது, நம்முடைய ரூட்டர்/ மோடம்  இணையத்தில் தொடர்பில் இருக்கும் பொழுது,  லேப்டாப்பை  ஆன் செய்தாலே  போதுமானது.

இப்படி நமது இணைய கணக்கில் நம்மைத் தவிர வேறு யாரும் நுழையாதவாறு, பாதுகாப்பது எப்படி?

இங்கே நான் விவரித்திருப்பது 'Linksys WRT54GS' ரூட்டரில் இதை எப்படி செய்வது எனபது குறித்து. உங்களுடைய மோடம் / ரூட்டர் க்கு தகுந்தாற்போல ஒரு சில ஆப்ஷன்கள் மாறலாம்.

முதலில் உங்கள் ரூட்டருக்கு கடவு சொல்லை அவ்வப்பொழுது மாற்றுங்கள்.

இதற்கு, ரூட்டரில் லாகின் ஆக வேண்டும்.

உங்கள் உலவியை திறந்து கொண்டு, அதன் அட்ரஸ் பாரில் 192.168.1.1 என்ற ஐபி  அட்ரசை டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இப்பொழுது வரும் லாகின் திரையில் உங்கள் பயனர் பெயரும், கடவு சொல்லும் கொடுங்கள். (இணைய கணக்கின் பயனர்/கடவுசொல் அல்ல. ரூட்டருடையது வழக்கமாக பல ரூட்டர்களின் default பயனர் பெயர் admin கடவு சொல்லும் admin என்பதாகவே இருக்கும்.


பிறகு Administration -> Management சென்று Router Password  மற்றும் Re-enter to confirm field களில் கடவு சொல்லை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்.

இனி அடுத்த பகுதிக்கு செல்வோம்.

ஒவ்வொரு Ethernet Adapter க்கும், அதற்கான 12 இலக்க Unique Identifier உண்டு. இதனை MAC Address என அழைக்கிறோம். (MAC - Media Access Control) இதனை அடிப்படையாக கொண்டுதான் அனைத்து நெட்வொர்க் களும் ஒரு குறிப்பிட்ட கணினியை நெட்வொர்க்கில் அனுமதிக்கலாமா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறது.

நமது கணினிக்கான MAC Address ஐ கண்டறிய,

Start > Run.  சென்று cmd  என டைப் செய்து என்டர் கொடுங்கள். இனி திறக்கும் command prompt இல் ipconfig /all. என டைப் செய்து என்டர் கொடுங்கள். பிறகு திரையில் Ethernet Adapter Wireless Network Connection. என்ற பகுதியில் மூன்றாவதாக Physical Address. என்பதற்கு நேராக இருக்கும் MAC அட்ரசை குறித்துக்கொள்ளுங்கள். (உதாரணமாக 00-A0-C9-14-C8-29)

இனி உங்கள் ரூட்டர் மெனுவில்   Wireless > MAC Address > Wireless Mac Filter. சென்று  Enable என்பதை கிளிக் செய்து Permit only PCs listed to access the wireless network option, மற்றும் Edit MAC Filter என்ற  List button ஐ கிளிக் செய்து, நீங்கள் குறித்து வைத்துள்ள MAC Address ஐ டைப் செய்யுங்கள். பிறகு சேமித்துக் கொள்ளுங்கள்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் எந்த எந்த கணினிகளின் MAC address களை கொடுக்கிறீர்களோ, அந்த கணினிகளை தவிர வேறு கணினிகள் மூலமாக வயர்லெஸ் தொடர்பை உருவாக்க முடியாது.


suryakannan.blogspot.com எனது இந்த வலைப்பக்கத்தின் நூறாவது பதிவு. 
மார்ச் 2009 இல் துவங்கிய இந்த வலைப்பக்கம் இன்று 64926 பார்வையாளர்களுடனும், Alexa Ranking இல் 329081 ம் பெற்று வளர்ந்ததற்கு காரணமாக இருந்த தமிலிஷ். யூத்ஃபுல் விகடன், தட்ஸ்தமிழ், தமிழ்வெளி, திரட்டி, தமிழ்10, உலவு, நம்குரல், தமிழர்ஸ்  போன்ற தளங்களுக்கும், 
என்னை ஊக்குவித்த அனைத்து சக பதிவர்களுக்கும்,  எனது பல பதிவுகளை வெளியிட்ட தமிழ் கம்ப்யூட்டர்  பத்திரிகை  மற்றும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.   

Tuesday 20 October 2009

பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களை தடுக்க..,

தற்பொழுது பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின்  தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க ஒரு மென்பொருள் உங்களுக்காக..,


USB Firewall எனப்படும் இந்த மென் பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, பென் ட்ரைவை கனெக்ட் செய்யும் பொழுது, இந்த மென்பொருள், அதில் தானாகவே உங்கள் கணினியில் நுழைய முயற்சிக்கும் கோப்புகளை தடுத்து நிறுத்துகிறது. (முக்கியமாக Autorun.inf)

கீழே உள்ள சுட்டியிலிருந்து இந்த மென் பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கணினியில் வேறு ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப் பட்டிருந்தாலும், அதனோடு இதையும் உபயோகப்படுத்தலாம்..


நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய..

நெருப்புநரி உலவியில், பல தளங்களில் கடவு சொற்களை கொடுத்து சேமித்து வைத்திருப்போம். உதாரணமாக தமிலிஷ், தமிழ்10, தட்ஸ்தமிழ் போன்ற தளங்களில், ஒவ்வொருமுறையும் லாகின் செய்வதை தவிர்க்கும் முகமாக, Remember Password   எனும் வசதியை உபயோகித்து சேமித்து வைப்பது வழக்கம்.

இப்படி நாம் சேமிக்கும் கடவு சொற்களை ஒரு வேளை நாம் மறந்து விட்டால், நெருப்பு நரி உலவியில்,

Tools சென்று Options கிளிக் செய்து அதில் Security டேபை கிளிக் செய்யுங்கள். இதில் Saved Passwords... என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.  (இது நம்மில் பலர் அறிந்த ஒன்று)

இப்படி சேமித்த கடவு சொற்களை எக்ஸ்செல் போன்ற மென் பொருட்களுக்கு எக்ஸ்போர்ட் செய்வது எப்படி?

இந்த பணியை செய்ய Password Exporter எனும் நெருப்புநரி உலவியின் நீட்சியை நாம் கணினியில் நிறுவ வேண்டும். கீழே உள்ள சுட்டியிலிருந்து இந்த நீட்சியை தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள்.


இனி Tools மெனு சென்று, Add-ons ஐ கிளிக் செய்து அதில் Password Exporter பகுதிக்கு சென்று Optios ஐ கிளிக் செய்தால், Import/Export Passwords டயலாக் பாக்ஸ் வரும்.  இதில் சென்று சேமித்த கடவு  சொற்களை இம்போர்ட் அல்லது எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். (XML அல்லது  CSV கோப்பு வடிவத்தில் சேமிக்கலாம்.)CSV (Comma Separated Values) ஆக சேமிப்பது நல்லது.


.
Monday 19 October 2009

உபுண்டு லினக்ஸ் - லாகின் விண்டோவை நீக்குவது எப்படி?

நீங்கள் உபுண்டு லினக்ஸ் உபயோகிப்பவரா? ஒவ்வொரு முறையும் கணினியை துவக்கும் பொழுது, உபுண்டுவின் லாகின் விண்டோ வருவது உங்களுக்கு தேவையில்லை எனில், லாகின் விண்டோ வராமல், ஆடோமடிக் லாகின் ஆவதற்கு என்ன செய்யலாம்.உபுண்டுவில்  System சென்று Administration இல் Login Window வை கிளிக் செய்யுங்கள்.உப்போழுது திறக்கும் Login Window Preferences விண்டோவில், Security டேபை கிளிக் செய்து , அதில் Enable Automatic Login என்பதை தேர்வு செய்து, உங்களுக்கு தேவையான User ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.


 .

Friday 16 October 2009

உபுண்டுவில் ஐபாட் உபயோகிப்பது எப்படி?

விண்டோஸ் பயனாளிகள், உபுண்டுவிற்கு மாறிய பிறகு ஐபாட் எப்படி உபயோகிப்பது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அவர்களுக்கான  தீர்வு  இது.

iTunes போல உபுண்டுவில் பிரபலமான மியூசிக் பிளேயர் Amarok. இந்த இலவச மென் பொருளை உபுண்டுவில் எப்படி நிறுவுவது என்பதை பார்க்கலாம். இணைய தொடர்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உபுண்டுவில் Applications சென்று அதில் Accessories -ல் Terminal Window விற்கு செல்லவும். இனி திறக்கும் Terminal Window வில் கீழ்கண்ட கட்டளை   கொடுத்து, அமரோக் நிறுவி  முடியும் வரை சில நிமிடங்கள் காத்திருக்கவும்.


           sudo apt-get install amarok


பிறகு MP3 format வசதியை உள்ளினைக்க கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.
sudo apt-get install libxine1-ffmpeg
sudo apt-get install kubuntu-restricted-extras
 நிறுவி முடிந்ததும்,  Terminal Window வை மூடி விடலாம்.  இனி உங்கள் ஐபாடை கணினியில் இணையுங்கள். கீழே உள்ளது போல ஒரு window திறக்கும்.
இதில் வழக்கமாக Rythmbox Music Player என்ற மென்பொருள் தேர்வாகியிருக்கும். இதற்கு பதிலாக Open Amarok என்பதை தேர்வு செய்து, தேவைப்பட்டால் 'Always perform this action' என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.


  இப்பொழுது நீங்கள் Amarok music player ஐ Default player ஆக தேர்வு செய்திருக்கிறீர்கள். இனி நீங்கள் மிக எளிதாக, பாடல்களை உங்கள் ஐபாடிற்கு ஏற்றலாம்.


உபுண்டு இயங்குதளத்தை எந்த வைரசும் தாக்காது என்பதால் ஐபாடில் வைரஸ் வருமோ என்ற கவலை வேண்டாம். 


.

Tuesday 13 October 2009

கூகிள் தேடுபொறியில் மாற்றம் செய்ய..,

கூகிள் தேடு பொறியில் சர்ச் பாக்ஸில் நாம் டைப் செய்யும்பொழுது, அதுவாகவே சில வார்த்தைகளை நிரலில் காண்பிக்கும். உதாரணமாக சர்ச் பாக்ஸில் 'Y' என டைப் செய்தால், நிரலில் Yahoomail, Yahoo, Youtube போன்று சிலவற்றை காண்பிக்கும். இந்த வசதி சில சமயங்களில் உதவியாக இருந்தாலும், பல நேரங்களில், நாம் எதைக்குறித்து தேட வந்தோம் என்பதையே மறந்துவிட்டு, வேறு ஏதாவது வலைப்பக்கங்களில் ஆழ்ந்து விடுவோம்.

இது மட்டுமல்லாமல் கூகிள் சர்ச் பாக்ஸில் எதாவது தேட முற்படுகையில், நமக்கு தேவையில்லாத சில ஆபாசமான தளங்களுக்கான சிபாரிசும் தரும். உதாரணமாக நாம் Tamil Songs என டைப் செய்ய முற்படும்பொழுது Tamil S என்று டைப் செய்த உடனே, என்ன வருகிறது என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.


   
இது போன்ற சங்கடங்களை தவிர்க்க என்ன செய்யலாம்.

கூகிள் தளத்திற்கு சென்று வலது மேல்புற மூலையில் உள்ள Settings என்ற லிங்கை  கிளிக் செய்து Search Settings செல்லுங்கள். அங்கு Query Suggestions பகுதிக்கு சென்று Do not provide query suggestions in the search box என்பதை தேர்வு செய்து, Save Preferences பொத்தானை சொடுக்கி சேமித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.சிறுவர்கள் உபயோகிக்கும் கணினிகளில், கூகிள் தளத்தில் Search Settings சென்று Safe search Filtering என்ற பகுதிக்கு நேராக உள்ள Use strict filtering (Filter both explicit text and explicit images) என்பதை தேர்வு செய்து சேமித்துக் கொண்டால், சிறுவர்கள் கூகிள் தளத்தில் தேடும் பொழுது Adult content களை தவிர்க்க முடியும்.


 

.


Saturday 10 October 2009

ஜிமெயிலில் இன்லைனில் படங்களை இணைப்பது எப்படி?

ஜிமெயில் உபயோகிப்பவர்கள் ஏதாவது ஒரு படத்தை அனுப்ப வேண்டி இருந்தால்  வழக்கமாக Attachment மூலமாகவே படங்களை இணைக்கிறோம். அவ்வாறு அல்லாமல் மெயில் டெக்ஸ்ட் இன் இடையில் படங்களை இன்சர்ட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். (நாம் பிளாக்கரில் டெக்ஸ்ட் களுக்கு இடையில் படங்களை இணைப்பது போல.. )

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். பிறகு வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள்.  'Labs' என்ற லிங்கை கிளிக் செய்தால் அதில் நிறைய வசதிகள் தரப்பட்டிருப்பதை பார்க்கலாம்.


அதில் Inserting Images க்கு நேராக Enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes பொத்தானை கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள்.வழக்கமாக ஜிமெயில் கம்போஸ் திரை கீழே உள்ள படத்திலிருப்பது போல் இருக்கும்.Inserting Images ஐ enable செய்த பிறகு கீழே உள்ள படத்தில் இருப்பது போல காட்சியளிக்கும்.இனி நீங்கள் தேவையான டெக்ஸ்ட் ஐ டைப் செய்யும்பொழுது இடையில் படங்களை இணைக்க Compose mail - toolbar இல் உள்ள Insert Image பட்டனை கிளிக் செய்து, தேவையான படங்களை Browse செய்து insert செய்து விடலாம்.

இதனுடைய சிறப்பம்சம், இப்படி இணைத்த படங்களை பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ இயலும்.


.

Friday 9 October 2009

நெருப்பு நரியில் டவுன் லோடு லொகேஷனை மாற்ற...


நெருப்பு நரி உலவியில் வழக்கமாக நாம் டவுன்லோடு செய்யும் பொழுது அந்த கோப்புகள் My Documents\Downloads  அல்லது  Desktop போன்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட லொகேஷனில் சேமிக்கப்படும்.

இந்த லொகேஷனை மாற்றி நாம் உருவாக்கிய ஏதாவது ஒரு ஃபோல்டரில் (உதாரணமாக E:\My Downloads) டவுன்லோடு செய்ய என்ன செய்யலாம்.

மிகவும் எளிதான வழி..,

நெருப்பு நரி உலவியில் Tools மெனுவிற்கு சென்று Options கிளிக் செய்யவும். இனி திறக்கும் Options டயலாக் பாக்ஸில் Main டேபிற்கு செல்லவும்.இதில் Save Files to என்பதற்கு நேராக உள்ள Browse பொத்தானை கிளிக் செய்து தேவையான லொகேஷனை தேர்வு செய்து (உதாரணமாக E:\My Downloads) OK கொடுக்கவும்.

ஒரு வேளை ஒவ்வொருமுறை டவுன்லோடு செய்யும் பொழுதும், எங்கு சேமிக்க வேண்டும் என கேட்கும் வசதி தேவைப்பட்டால், அதற்கு கீழாக உள்ள Always ask me where to save files என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.

அவ்வளவுதான்.


.
 

Wednesday 7 October 2009

உபுண்டுவின் பொருள் என்ன?

 உபுண்டு என்ற சொல் பழங்கால ஆப்பிரிக்க மொழியில் "Humanity to others" என்ற பொருள் கொண்டதாகும். அதன் பொருளுக்கேற்ற பணியை அது நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

உபுண்டு என்றாலோ அல்லது லினக்ஸ் என்றாலோ நம்மில் பலருக்கு ஒரு வித தயக்கம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் உபுண்டுவை உபயோகிக்க எந்த விதமான பயமோ, தயக்கமோ தேவையில்லை.

இது மற்ற இயங்குதளங்களை விட பல மடங்கு பாதுகாப்பானது மற்றும் உபயோகமானது, ஏனெனில் மற்ற இயங்குதளங்களை உருவாக்குகின்ற கணினி வல்லுனர்கள் போலல்லாமல் (ஒரு இயங்குதளத்தை உருவாக்க மீறிப் போனால் இரண்டாயிரம் பேர் இருப்பார்களா?) , பொதுமக்கள் பாதுகாப்பாகவும், இலவசமாகவும் உபயோகப்படுத்தும் வகையில், பல லட்சம் கணினி வல்லுனர்களால் தங்களின் அதிக பட்ச கணினி அனுபவத்தோடும், அளவுகடந்த ஆர்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் (சம்பளத்திற்க்காகவோ, வியாபார நோக்கிலோ அல்லாமல்) உருவாக்கப்பட்ட இயங்குதளம் எப்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்க முடியும்? 

இப்படிப்பட்ட ஒரு கட்டற்ற இலவச மென்பொருட்களைப் பற்றிய நமது தயக்கங்களையும், பயத்தையும் போக்கும் முகமாக, சேலத்தில் நண்பர் திரு. செல்வமுரளி அவர்களின் தீராத ஆர்வத்தோடு, NRCFOSS ( National Research Centre For Open Source Softwares) -ல் தமிழ் உபுண்டு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இராமதாசன் அவர்களோடு இணைந்து, ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கம் உங்களுக்காகவே, வருகின்ற 11-10-2009 அன்று  சேலத்தில் நடைபெற உள்ளது.இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

Tuesday 6 October 2009

நெருப்புநரி உலவியில் யூ ட்யூப் வீடியோக்களை சினிமா வடிவில் பார்க்க..,

யூ ட்யூப் பிரியரா நீங்கள்?. வீடியோக்களை உலவிகளில் சிறிய அளவிலும், பேக்க்ரவுண்டில் வலைப்பக்க எழுத்துக்களும், விளம்பரங்களுமாக பார்த்து போரடித்து விட்டதா? எந்த இடையூறுகளும் இல்லாது, வீடியோவை மட்டும் சினிமா போல பார்க்க விருப்பமா?

இதோ நெருப்புநரி உலவிக்கான Youtube Cinema Extension ..,

வழக்கமாக யூ ட்யூப் வீடியோ உலவியில் இப்படி இருக்கும்.

மேலே உள்ள சுட்டியை சொடுக்கி நெருப்பு நரி நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு Options -ல் சென்று உங்கள் தேவைக்கேற்ற மாறுதல்களை செய்து கொள்ளுங்கள்.
யூ ட்யூப் தளத்தில் மெளசை  வலது கிளிக் செய்தால் இறுதியில் புதிதாக இரண்டு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும்.

யூ ட்யூப் தளத்தில் எந்த வீடியோவை சினிமா ஸ்டைலில் பார்க்க வேண்டுமோ அந்த வலைப் பக்கத்தில் மெளசை வலது கிளிக் செய்து 'Play in Cinema' என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது வீடியோவானது மற்றொரு டேபில் ஏறக்குறைய முழுத் திரையில் திறக்கும். இன்னும் சில மாறுதல்களை  செய்வதன் மூலம், வீடியோவை இன்னும் தெளிவாக்கலாம். திரையின் வலது மேல் புற மூலையில் நிறங்களை தேர்ந்தெடுத்து பேக்கிரவுண்ட் நிறத்தை மாற்றலாம். வலது கீழ்ப்புற மூலையில் தரப்பட்டுள்ள வசதிகளை உபயோகித்து வீடியோ திரையின் அளவை மாற்றலாம்.
இந்த நீட்சியை நிறுவி வீடியோவை தெளிவாக பார்த்து ரசியுங்கள்.


.

Saturday 3 October 2009

நோட்டிஃபயர் போடு ஜிமெயிலில் விளையாடு..,

நீங்கள் ஜிமெயிலில்  ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பவரானால் இது உங்களுக்குத்தான்.

ஒவ்வொருமுறையும் உலவியை திறந்து ஜிமெயில் சென்று பயனர் பெயரும், கடவு சொல்லும் கொடுத்து களைத்து போகாமல் இருக்க இந்த ஜிமெயில் நோட்டிஃபயர் மென்பொருள் பெரிதும் உதவியாக உள்ளது.

இந்த மென்பொருள் இணையத் தொடர்பில் இருக்கும் பொழுது உங்களுக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்தால் அறிவிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை இந்த மென்பொருள் கையாளவல்லது என்பது இதனுடைய முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று.

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியபிறகு, வரும் திரையில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அடுத்த திரையில் உங்கள் மின்னஞ்சல் முகவரியும், கடவு சொல்லையும் கொடுங்கள்.


(உங்கள் ஜிமெயில் கணக்கில் IMAP என்பது enable செய்யப் பட்டிருக்க  வேண்டும். இதற்கு என்ன செய்வது இங்கே கிளிக் செய்து இந்த இடுகையில் நான் சொன்னவற்றை பின்பற்றவும்) 


இதில் உங்களுடைய ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை கொடுக்கலாம்.

இனி இது அமைதியாக உங்கள் டாஸ்க்பாரில் அமர்ந்து கொண்டு, அதன் வேலையை செய்யும்.


இந்த ஐகானை வலது கிளிக் செய்து உங்களுக்கு வந்த மின்னஞ்சலை பார்க்கலாம்.


இதிலுள்ள Preferences ஐ கிளிக் செய்தால் இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.

இனி என்ன?
நோட்டிஃபயர் போடு ஜிமெயிலில் விளையாடு..,


.

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)