Tuesday, 28 April, 2009

Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,


சிலசமயம் நாம் தவறுதலாக 'Quick Launch Bar' -ல் உள்ள 'Show Desktop' ஐகானை டெலீட் செய்து விட்டால். அதை எப்படி திரும்பவும் உருவாக்குவது.


நோட்பேடை திறந்து கொண்டு கீழே உள்ளவற்றை டைப் செய்யவும்.

[Shell]
Command=2
IconFile=explorer.exe,3
[Taskbar]
Command=ToggleDesktop


இந்த கோப்பை சேமிக்கும் பொழுது, கொடுத்து ஃபைல் டைப்பை 'All Files' என்பதை தேர்வு செய்து, 'Show Desktop.scf' எனப் பெயரிட்டு சேமித்துக் கொள்ளவும். ('Show Desktop.scf.txt' என்ற பெயரில் 'save' ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.)

இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது, அந்த கோப்பை 'Quick Launch bar' க்கு டிராக் செய்து விடவும்.

வழி இரண்டு

'Start -> Run' க்கு சென்று 'regsvr32 /n /i:U shell32.dll' என டைப் செய்து ஓகே கொடுங்கள். இந்த கட்டளை 'Show Desktop' ஐகானை திரும்ப கொடுக்கும்.

Wednesday, 22 April, 2009

IE - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங்கள்Start சென்று 'Run' ல் 'gpedit.msc' என டைப் செய்து ஓகே கொடுங்கள். இப்பொழுது 'Group Policy' என்ற புதிய விண்டோ திறக்கும். இதில்,'User Configuration ->
Windows Settings ->
Internet Explorer Maintenance ->
Browser User Interface'

சென்றால் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.
Browser Title
Custom Logo
Browser Toolbar Customizations
இங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி டைட்டில், லோகோ பிட் மேப்ஸ், அனிமேட்டட் பிட் மேப்ஸ், டூல் பார் கஸ்டமைசேஷன் என 'IE' இன் தோற்றத்தை மாற்றி பயன் பெறுங்கள்

Sunday, 19 April, 2009

பிளாக்கரில் ஃபிளாஷ் (SWF) கோப்புகளை அப்லோடு செய்வது எப்படி ?sites.google.com சென்று உங்களுக்கென்று ஒரு வலைத்தளத்தை நிறுவிக்கொள்ளுங்கள்.

நீங்கள் அப்லோடு செய்ய விரும்பும் 'SWF' கோப்பை ' Attach' செய்து விடுங்கள். அப்லோடு ஆன பிறகு அந்த கோப்பில் மௌசின் வலது பொத்தானை அழுத்தி 'Copy Link Location' சேமித்துக் கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து, புதிய இடுகையில் 'New Post ' ல் 'Edit Html' சென்று கீழ்கண்ட வரிகளை சேர்க்கவும்.

இதில் 'Yourfile.swf' என்பதற்கு பதிலாக காப்பி செய்த லிங்க் லொகேஷனை பேஸ்ட் செய்யவும்.

அவ்ளோதான்Friday, 17 April, 2009

தீமை மாத்து! என்ஜாய் பண்ணு!


ஒரே மாதிரியாக ஃபயர் ஃபாக்ஸை பார்த்து பார்த்து போரடிக்கிறதா உங்களுக்கு, ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாய் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

கீழே உள்ள சுட்டியில் கிளிக்கி, இந்த ஃபயர் ஃபாக்ஸ் நீட்சியை நிறுவி, விருப்பபட்ட தீமை தேர்ந்தெடுத்து மகிழுங்கள்.

https://addons.mozilla.org/en-US/firefox/search?q=&cat=2%2C0
பவர்பாயிண்ட் ட்ரிக்ஸ்
1. திரைப்படங்களின் இறுதியில் வரும் ஸ்க்ரோலிங் கிரிடிட்ஸ் போல பவர்பாயிண்டில் டெக்ஸ்ட் அனிமேஷன்

டெக்ஸ்ட் பாக்ஸில் டெக்ஸ்டை டைப் செய்து கொள்ளுங்கள்.

அந்த டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 'Custom animation ' செல்லவும். அதில் Add Effect -> Entrance -> Fly in தேர்ந்தெடுக்கவும். ' Options' ல் உள்ள 'Speed ஃபீல்டில் Very Slow என்பதை தேர்வு செய்யவும்.

இப்பொழுது அந்த எஃபெக்ட் கீழே உள்ள கட்டத்தில் வந்திருக்கும். அதில் ரைட்கிளிக் செய்து Effect Options -> Text Animation -> Group Text -ல் 'One Object ' கொடுத்து விட்டு பிரிவ்யூ பாருங்கள்.

மறுபடியும் அதே டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 'Custom animation ' செல்லவும் அதில் Add Effect -> Exit -> Fly out தேர்ந்தெடுக்கவும். ' Options' ல் உள்ள 'Speed ஃபீல்டில் Very Slow என்பதையும், 'Direction' ஃபீல்டில் To Top என்பதையும் தேர்வு செய்யவும்.

கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தி பார்க்கவும்..,


2. நீங்கள் எடிட் செய்து கொண்டிருக்கும் ஸ்லைடிலிருந்து ஸ்லைடு ஷோவை துவக்க..,

உங்கள் பிரசன்டேஷனில் 50 ஸ்லைடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 46 வது ஸ்லைடில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது ஸ்லைடு ஷோ கிளிக் செய்தால் முதலாவது ஸ்லைடிலிருந்துதான் ஸ்லைடு ஷோ துவங்கும். ஆனால் 46 வது ஸ்லைடிலிருந்து துவக்க Shift+F5 முயற்சித்துப் பாருங்கள்..,

3. சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ

வழக்கமாக ஸ்லைடு ஷோ முழு திரையில் வரும். சில சமயங்களில், இடையில் ஏதாவது ஸ்லைடில் எடிட் செய்ய வேண்டியிருந்தால், ஸ்லைடு ஷோவை நிறுத்தி (எஸ்கேப் கீயை மாங்கு, மாங்கென்று அடித்து) மறுபடி வரவேண்டும்.

இதற்கு மாற்று வழியாக 'Ctrl' யை பிடித்துக் கொண்டு இடது புறம் கீழே உள்ள ஸ்லைடு ஷோ பட்டனை கிளிக்கி பாருங்கள். ஒரு சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ வரும். மிகவும் எளிதாக ப்ரசன்டேஷனுக்கும், ஷோவுக்கும் மாறிக்கொள்ளலாம்.

Thursday, 16 April, 2009

ஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,டிப் - ஒன்று

ஒரு ஃபோல்டரில் பல படங்கள் இருந்தால், அதிலுள்ள ஒரு சில படங்கள் மட்டும் அந்த ஃபோல்டர் Thumbnails view வில் தெரியும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட படம் மட்டும் Thumbnails view வில் தெரியவைக்க ஒரு எளிய வழி..,

அந்த குறிப்பிட்ட படத்தை 'Folder.jpg' அல்லது 'Folder.gif' என Rename செய்து விடுங்கள்.

அவ்ளோதான்.

கொசுறு:-

உங்கள் மியூசிக் ஃபோல்டரில் ஒரு படத்தை 'Folder.jpg/Gif' என Rename செய்தால், விண்டோஸ் மீடியா பிளேயரில் அந்த படம் 'Album cover art' ஆக வரும் (விஷுவலைசேஷனை 'disable' செய்திருந்தால்)

டிப் -இரண்டு

விண்டோசில் 'Search' ல் ஏதாவது தேடப் போனால் நாய் வந்து பிராண்டிக் கொண்டிருக்கும்.

இந்த நாயை துரத்த என்னவழி?

'Search'விண்டோவை திறந்து கொள்ளுங்கள்.

'Change Preferences -> Without an animated screen character'

என்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா?

Wednesday, 15 April, 2009

USB ட்ரைவை விண்டோஸ் எக்ஸ்பி துவக்குவதற்கான ஒரு சாவியாக உபயோகப்படுத்த ஒரு டிப்ஸ்
சமீப காலமாக விற்பனைக்கு வந்து கொண்டி
ருக்கும் கணினி தாய் பலகைகளில் (Mother Board) USB Booting feature வருகிறது. இதை பயன்படுத்தி கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி நேரடியாக துவங்காமல் உங்கள் USB டிரைவை ஒரு 'Key' ஆக பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அதாவது உங்கள் 'USB Drive' இல்லாமல் உங்கள் கணினி பூட் ஆகாது.


ஒரு முன் எச்சரிக்கையாக விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டாலேஷன் சிடியை அருகில் வைத்துக் கொள்ளவும்.
தேவையான USB டிரைவ் குறைந்தபட்சம் 512 எம்பி கொண்டதாக இருக்கவேண்டும்.

"USB Disk Storage Format Tool" என்ற பயன்பாட்டு நிரலை கீழ்கண்ட தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

http://www.pctipp.ch/downloads/dl/32594.asp

http://snipurl.com/tacdecஇதில் டிவைஸில் உங்கள் USB டிரைவை தேர்ந்தெடுத்து, ஃபைல் சிஸ்டத்தில் 'FAT' தேர்ந்தெடுத்து வால்யூம் லேபிள் (11 உருக்கள்) ஏதாவது கொடுத்து ஸ்டார்ட் கொடுக்கவும். (கவனம்: - 'USB' டிரைவில் உள்ள அனைத்தும் அழிக்கப்படும்)

மை கம்ப்யூட்டரை திறந்து, Tools -> Folder Options -> View -> Show hidden Files and Folders -> Hide protected operating system files என்பதை டிஆக்டிவேட் செய்யவும்.

உங்கள் கணினியின் சிஸ்டம் டிரைவிற்கு சென்று (எந்த டிரைவில் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கிறதோ அந்த டிரைவ்,உதாரணத்திற்கு ' C:' என வைத்துக் கொள்வோம்) ரூட் டைரக்டரியில் உள்ள 'boot.ini, ntldr, NTDETECT.COM ' ஆகிய ஃபைல்களை 'USB' டிரைவிற்கு காப்பி செய்து கொள்ளவும்.

'C:\' ட்ரைவில் உள்ள 'BOOT.INI' என்ற ஃபைலை 'BOOT.BAK ' என 'RENAME' செய்து கொள்ளுங்கள். இனி உங்கள் கணினி ஹார்ட் டிரைவிலிருந்து பூட் ஆகாது. அதே சமயம் உங்கள் 'USB' டிரைவ் உங்கள் கணினியின் இயங்குதளத்தை திறக்கும் சாவியாக மாற்றப்பட்டுள்ளது.

இனி சோதித்து பார்க்கலாம்..,

உங்கள் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்து 'BIOS' இற்குள் சென்று 'USB' டிரைவை 'FIRST BOOT DEVICE' ஆக மாற்றிக்கொள்ளவும், 'QUICK BOOT' ஐயும் 'SHOW FULL SCREEN LOGO' ஐயும் முடக்கி (DISABLE), 'USB LEGACY SUPPORT' மற்றும் 'USB 2.0 CONTROLLER' ஆகியவைகள் இருந்தால் அவைகளை ஆக்டிவேட் செய்து சேமித்து 'BIOS' லிருந்து வெளிவரவும்.


இப்பொழுது உங்கள் கணினி 'USB' டிரைவில் பூட் ஆகும்.

ஒருவேளை அப்படி ஆகவில்லையெனில் 'USB' ட்ரைவின் ரெஸ்பான்ஸ் டைமை 'BIOS' ல் அதிகரிக்கும் வழி உள்ளதா என பார்க்கவும், உதாரணமாக, 'USB MASS STORAGE RESET DELAY' அதில் உள்ள அதிகபட்ச மதிப்பை தேர்ந்தெடுக்கவும்.

என்ன 'USB' டிரைவில் பூட் ஆகிவிட்டதா?

ஏதாவது சிரமம் ஏற்பட்டால் பின்னூட்டம் இடவும்.

மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற...,

'USB' ல் பூட் ஆகி விண்டோஸ் வேலை செய்தால், 'C:\' ட்ரைவில் உள்ள 'BOOT.BAK' என்ற ஃபைலை 'BOOT.INI' என 'RENAME' செய்து கொள்ளுங்கள்.

'USB' ல் பூட் ஆகவில்லையெனில், 'BIOS' ல் 'FIRST BOOT DEVICE' டிவைஸை உங்கள் சிடி ட்ரைவாக தேர்வு செய்து கொள்ளவும். விண்டோஸ் இன்ஸ்டாலேஷன் சிடியை உபயோகித்து பூட் செய்து இன்ஸ்டாலேஷன் விஸார்டில் ரிப்பேர் என கொடுத்து, அதில் வரும் டாஸ் பிராம்ப்டில் 'REN C:\BOOT.BAK C:\BOOT.INI' என கொடுத்து ரீ-ஸ்டார்ட் செய்யவும்.

Thursday, 9 April, 2009

இலவச இயக்கி (Operating system) உங்களுக்காக..,

விண்டோஸ் எக்ஸ்பி, உபுந்து, விஸ்டா போன்ற இயக்கிகளில் தினமும்வேலை செய்து அலுத்து போனவர்களுக்காக இந்த இயக்கி உங்களுக்காக முற்றிலும் இலவசம் ..,

இதில் அனைத்து Option களையும் உபயோகித்துப் பாருங்கள்..,

வேடிக்கை!...
I was wondering if anybody has tried www.AlexaAutoSurf.com and if so are they any good?... they look good on paper, but I am still waiting for one of my websites to get approved...


YES real visitors visit your site but most of them they are not a their pc since the changing of sites is automatic. If you want good TARGETED traffic , autosurf is not for you but these kind of programs are great of boosting a bit your alexa ranking

பாகம்-2 ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி


ஃபயர் ஃபாக்ஸில் எந்த விதமான Streaming வீடியோவையும் டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பார்த்தோம்முதல் பதிவை படிக்காதவர்கள் கீழ்கண்ட தளத்திற்கு செல்லவும்.,

http://suryakannan.blogspot.com/2009/04/blog-post_08.html


இப்படி டவுன்லோடு செய்த ஃபைலுக்கு வழக்கமாக Extension இருக்காது. நீங்களே அதை Rename செய்து .FLV என கொடுத்துவிடுங்கள்.


இப்படி டவுன்லோடு செய்த வீடியோவை கணினியில் மட்டும் தானே பார்க்கமுடியும்.


AVI ஆக மாற்றி அதை Nero போன்ற மென்பொருள் மூலமாக ஒரு VCD ஆகவோ அல்லது DVD ஆகவோ மாற்ற முடியுமா?
உங்கள் மொபைல் போனில் அல்லது ஐபாடில் பதிய முடியுமா?

முடியும்! அதுவும் ஒரு 100% இலவச மென்பொருளைக்கொண்டு ..,


கீழ்கண்ட தளத்திலிருந்து MediaCoder 0.7.0 RC 3 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


http://www.freewarefiles.com/MediaCoder_program_18085.html

இந்த மென்பொருள் மூலம் மேற்சொன்ன அனைத்தும் சாத்தியமே..,Wednesday, 8 April, 2009

ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி
Youtube, Tamilo போன்ற வலைப்பக்கங்களில் இடம்பெறும் வீடியோ படங்களைடவுன்லோடு செய்ய எளிதான வழி என்ன என்பதைபார்க்கலாம். (Streaming Video )ஃபயர் ஃபாக்ஸில் 'UnPlug' என்ற Add-ons கீழ்கண்ட முகவரியிலிருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


https://addons.mozilla.org/en-US/firefox/addon/2390


(ஒரு வேளை 'UnPlug' இல்லையென்றால் Download Management -ல் 'UnPlug' என டைப் செய்து தேடவும்)நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்திற்கு சென்று வீடியோ துவங்கியவுடன் ல் Toolbar - 'Unplug' என்ற Add-on- ஐ கிளிக் செய்யவும்.
அல்லது Tools->Unplug கிளிக் செய்யவும்.

பிறகு வரும் விண்டோவில் open சென்று 'Open in New Window' கொடுக்கவும்.

'Save' செய்து கொள்ளுங்கள். இது வழ்க்கமாக FLV ஃபைலாக இருக்கும். இதை Media Player Classic / VLC Player -ல் பிளே செய்ய முடியும்.Monday, 6 April, 2009

ஃபோட்டோ ஃபன்னியா !...,உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களுக்கு வித்தியாசமான 'Effect' களை கொடுக்க 'Photoshop' போய் மண்டையை பிய்த்துக் கொள்ளாமல் கீழ்கண்ட இணைய முகவரிக்கு சென்று பாருங்கள்.

http://www.photofunia.com/

'Photofunia' என்பது ஒரு ஆன்லைன் ஃபோட்டோ எடிட்டிங் உபகரணமாகும். உங்கள் புகைப்படத்தை 'Upload' செய்தால் இதில் உள்ள மென்பொருள் அந்த படத்தில் உள்ள முகத்தை மட்டும் அதுவாகவே கண்டறிந்து, 100 க்கும் மேற்பட்ட 'Effect' களில் உங்கள் புகைப்படத்தை மெருகூட்டுகிறது.

கண்ணைக் கவரும் Effect- கள்.., ரூபாய் நாணயம், ஹோர்டிங்க்ஸ், தரை ஓவியம், தொலைக்காட்சி, சுவரோவியம், செய்தித்தாள், டீசர்ட், மோனாலிஸா இப்படி நிறைய...,

போய்தான் பாருங்களேன்..

பிளாக்கரில் MP3 ஐ பதிவேற்றம் செய்ய..,
வழக்கமாக பிளாக்கரில், படங்கள் மற்றும் காணொளி யை இணைக்க வழிவகை உண்டு. ஆனால் ஒரு MP3- ஐ இணைக்க அந்த கோப்பை WMV கோப்பாக மாற்ற வேண்டும். இதற்கு என்ன செய்யவேண்டும் எனப் பார்ப்போம்.

முதலில் இதை செய்வதற்கு உங்கள் கணினியில் Windows Movie Maker மென்பொருள் இருக்க வேண்டும். இந்த மென்பொருள் வழக்கமாக Windows XP Service Pack 2 வுடன் வரும். ஒருவேளை உங்கள் கணினியில் 'Windows Movie Maker' இல்லையென்றால் இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

விண்டோஸ் மூவி மேக்கர் - ஐ திறந்து கொண்டு அதில் 'File -> Import into Collections' சென்று எதாவது விருப்பப்பட்ட ஒரு 'JPG' கோப்பை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்பு 'Collections' டேபில் தெரியும், அதை டிராக் செய்து கீழே உள்ள வீடியோ ட்ராக்கில் டிராப் செய்யவும்.

பிறகு எந்த MP3 கோப்பை WMV ஆக மாற்ற வேண்டுமோ அந்த கோப்பை மறுபடியும் 'Import into Collections' சென்று தேர்ந்தெடுத்து கீழே உள்ள ' Audio/Music Track' ல் ட்ராக் அன்டு டிராப் செய்து கொள்ளவும். பிறகு இந்த கோப்பை சேமித்துக் கொண்டு, பிளாக்கரில் 'Add Video' -ல் மிகவும் எளிதாக பதிவேற்றம் செய்து விடலாம்.


Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)